ethiri.com

வித்தியா கற்பழிப்பு வழக்கு சுவிஸ்குமாரை காப்பாற்றி சென்ற பொலிஸ்மா அதிபரை கைது செய்ய உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரி
சுவிஸ் குமார் தப்பித்து செல்ல உடந்தையாக இருந்து செயல்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க
கைது செய்ய உத்தரவுகள் பிறப்பிக்க பட்டுள்ளன

இவர் புரிந்த இந்த மானுட விதிக்கு எதிரான செயலினால் மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டு நீதிமன்றம் ,மற்றும் பொலிசாருக்கு எதிராக மக்கள்
போராட்டங்களில் குதித்தனர் ,அதுவே கலவரமாக மாறியதுடன் அப்பாவி வாலிபர்கள் முப்பதுக்கு மேற்பட்டவர்கள் கைது
செய்ய பட்டு சிறைகளில் அடைக்க பட்டதுடன் ,

ethiri.com

அந்த மாணவர்களின் கல்வி கற்றல் நடவடிக்கைகளும் பாதிக்க பட்டன .
இதுவரை தமிழ்மறான் ,மற்றும் இந்த போலிஸ் அதிகாரியை கைது செய்து விசாரிக்க மறுத்து வந்த நீதிமன்றம் தற்போது இந்த கைது
உத்தரவை பிறப்பித்துள்ளது வழக்கின் முக்கிய திருப்புமுனையாக அமைய பெற்றுள்ளது .

எனினும் மக்கள் குழப்பத்திற்கும. சமுக விரோத செயலை புரிந்து படுகொலை புரிந்த கொலையாளியை
நாட்டை விட்டு தப்பி ஓட வைக்க மேற்கொண்ட இவரது சட்டத்திற்கு எதிரான் செயலுக்கு தண்டனை வழங்கி சிறையில்
அடைக்க படுவாரா ..?

மக்களினால கைது செய்ய பட்ட கொலையை எவ்வாறு பொலிஸ் காவலில் இருந்து இவர் தப்பிக்க விட்டார் ..?

சட்டத்தரணி தமிழ்மாறனுக்கு இரு காவல்துறையினரை பாதுகாப்பு வழங்கி குற்றவாளியை அவருடன் இணைந்து தப்பிக்க வைக்க
இவர் எவ்வாறு உதவ முடியும் என்ற மக்கள் கேள்விகளுக்கும் நீதிமன்றின் பதில் எதுவாக இருக்க போகிறது .
பொறுத்திருந்து பார்ப்போம் .

தமிழ்மாறன் ,சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க சிறையில் அடைக்க பட விட்டால் மீளவும்
மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் என்பதில் சந்தேகமில்லை . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post