ethiri.com

பெருந்தோட்டங்களை அண்மித்த தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்கள் 113
பேருக்கான நியமனங்கள் நேற்று கல்வி அமைச்சில் (12.07.2017) வழங்கி வைக்கப்பட்டது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்¸கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள்
முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி
இராதாகிருஸ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான ஆகியோர்
இணைந்து நியமனங்களை வழங்கி வைத்தனர்.நியமனங்கள் வழங்கி வைக்கப்படுவதையும்
கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post