ethiri.com

கண்டி நகரில் பாதைசாரிகள் கடவை அழிகின்றது- கொறட்டை விடும் காவல்துறை குதிரை சவாரி – படங்கள் உள்ளே

கண்டி நகரத்தின் மத்தியில் இலங்கையில் எந்த ஒரு நகரத்திலும் காணமுடியாத பாதசாரி கடவைகள் நகரத்தின் மத்தியில் சந்திக்கு சந்தி காணப்படுகின்றது. இது பாதசாரிகளுக்கு மிகவும் இலதுவாக பாதையை கடக்க கூடியதாக உள்ளதுடன் ஒரே நேரத்தில் 08 பக்களுக்கு பாதசாரிகள் கடக்க கூடியதாகவும் உள்ளது. இங்கு சமிக்கை விளக்குகளும் பொருத்தபட்டுள்ளது. இதனால் கண்டி நகரத்திற்கு வரும் பெரும் திறாலான மக்களுக்கு பாதுகாப்பும் நன்மையுடையதாக இருக்கின்றது.

இருந்த பொழுதும் தற்போது பாதசாரி கடவைகளில் பூசபட்டிருக்கும் மஞ்சல் நிற வர்ணம் அழிந்து கடவைகளும் அழிந்து வருகின்றது. இதனால் பாதசாரிகள் முறையாக பாதையை கடப்பதில்லை. சமிக்கை விளக்கு மிளிரும் போது பாதைசாரிகள் அங்கும் இங்குமாக அலைந்து பாதையை கடக்கினறனர். இதனால் வாகனங்கள் செல்வதற்கான சமிக்கை வரும் பொழுது வீபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் அழிந்து வரும் மஞ்சட் கடவைகளை முறையாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமானதாகும்.


 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post