ethiri.com

ரூ.5 கோடி சம்பளம்: உயர்ந்த நடிகையின் புதிய கண்டிஷன்

உயரமான நடிகை நடித்த பிரம்மாண்ட படம் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு முன்னர் அந்த நடிகை நடித்த எந்த படமும் பெரிய அளவில் ஓடவில்லை. நடிகைக்கும் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரங்களும் அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அப்படியிருக்கையில், இந்த பிரம்மாண்ட படம் நடிகைக்கு மார்க்கெட்டை எகிற வைத்துள்ளதாம். இனிமேல் பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பேன், சம்பளமும் ரூ.4 கோடி கொடுக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம். தன்னை ஒப்பந்தம் செய்யும் வரும் இயக்குனர்களிடம் இந்த கண்டிஷனை சொல்லி, அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டால்தான் கதையே கேட்கிறாராம்.

இதனால், ஒரு சரித்திர பட வாய்ப்பையே அவர் உதறி தள்ளிவிட்டாராம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக அது இருந்தாலும் அதில் பெரிய ஹீரோ இல்லை என்பதால் அந்த படத்தை உதறிவிட்டாராம். . 

Related Post