ethiri.com

ரஜனி அரசியல் வெல்லுமா ..?

வருவாய் என்றே வருவாய் என்றே
வழிகள் காத்திருக்கு – நீ
வந்தென்ன செய்வாய் என்றே தானே
விழிகள் பூத்திருக்கு …

கசங்கி கிடந்த உன்னை தானே
கையில் தூக்கிய தமிழன் ..
ஆட்சியில் வைத்து உன்னை என்ன
அழகா பார்ப்பான் சொல்லு ..?

ethiri.com

நேற்று வரைக்கும் தமிழன் அழிவை
நேரே காண மறந்தாய் …
இன்று வந்து நாட்டை ஆண்டு
என்ன செய்ய போறாய்…?

எதிரே கணையாய் எதிரிகள் வருவார்
என்ன செய்ய போராய்…?
கூட நின்றவன் முதுகில் குத்துவான்
குனிந்தா நிற்பாய் சொல்லு ..?

தமிழர் நாட்டை தமிழன் ஆழ
தர்மம் வெல்ல நில்லு ….
நாம் தமிழர் ஆளத்தானே
நன்றே உதவு கண்ணு …!

ஆக்க ம்- வன்னிமைந்தன் (ஜெகன் )
படைப்பு -26,06,2017 

Related Post