ethiri.com

டயஸ்போரா” மேல் அச்சம் கொள்ளாதீர்கள் -கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்

யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெயியேறிய புலம்பெயர்ந்த (டயஸ்போரா) தமிழர்களின் உதவிகளை பெற்று இந்த நாட்டை மாத்திரம் அல்ல வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இந்த நாட்டில் டயஸ்போரா என்றால் மக்கள் மத்தியில் ஒரு பீதி இருக்கின்றது. அந்த நிலமை மாறி இவர்களை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சரும்¸ மலையக மக்கள் முன்னனியின் தலைவருமம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவருமான கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.

இயற்கையின் கோர தாண்டவத்தால் இரத்தினபுரி மாவட்டம் அயகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அயகம கல்வி கோட்டத்தில் வெள்ளதால் பாதிக்கபட்ட 1200 மாணவர்களுக்காகன கற்றல் உபணங்கள் கையளிக்கும் நிகழ்வு அயகம கல்வி கோட்ட கல்வி வலையத்தினால் மேற் கொள்ளபட்டு அயகம ராகுல வித்தியாலயத்தில் பாதிக்கபட்டவர்களிடம் கையளிக்கபட்டது. இந் நிகழ்வில் கலந்துக் கொண்டு அங்கு கருத்து தெரிக்கும் போதே மேற்படி கருத்தனை கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இந்த கற்றல் உபகரணங்களை இலண்டனில்; இயங்கிவரும் சிறுவர் வருமை நிவாரண நிதியத்தின் தலைவர் கலாநிதி சர்வேஸ்வரன்; வேலாயுதம் மற்றும் ஹென்றி அமலராஜ் ஆகியோரின்; உதவியுடன் “புணர்வாழ்வும் புது வாழ்வும்” என்ற தொணிப்பொருளில் வழங்கபட்டது. அயகம கல்வி கோட்டத்தில் இயற்கை அணர்த்தினால் 03 மாணவர்கள் இறந்துள்ளாரகள்¸ 05 பாடசாலைகள் முற்றாக சேதம் அடைந்துள்ளது. மேலும் 14 பாடசாலைகளின் மாணவர்களும் அவர்களின் குடும்பங்களும் பாதிப்புக்கு உள்ளாகி மொத்தமாக 19 பாடசாலைகளை சேர்ந்த 1200 மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளனர். இந் நிகழ்வில் மாகாண கல்வி பனிப்பாளர் குரப்பு ஆராச்சி¸ ஐ.தே.க அமைப்பாளர் சரத்சந்திர ஏக்கநாயக்க¸ அயகம கல்வி கோட்ட கல்வி பனிப்பாளர் லங்காசந்திர¸ இரத்தினபுரி மாவட்டம் மலையக மக்கள் முன்னனியின் உப தலைவர் ரூபன் பெருமாள்¸ உட்பட அதிபர்கள்¸ ஆசிரியர்கள்¸ மாணவர்கள்¸ பெற்றோர்கள். கலந்துக் கொண்டார்கள்.

ethiri.com

தொடர்ந்து இங்கு கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர். இங்கு வந்த அனர்த்தம் தமிழவர்¸ சிங்களவர்¸ முஸ்லிம்¸ கிருஸ்த்தவர்¸ என்ற பாகுபாடு பார்த்து வரவில்லை¸ அனைவருக்கும் பொதுவாகவே வந்துள்ளது. இதனை உணர்ந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். வடக்கில் அனர்த்தம் ஏற்பட்டால் தெற்கில் உள்ளவர்கள் உதவி செய்ய வேண்டு;ம் தெற்கில் அனர்த்தம் ஏற்பட்டால் வடக்கில் உள்ளவர்கள் உதவி செய்ய வேண்டும். இதுவே நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது. நிவாரணங்களும் அவ்வாறு வழங்க வேண்டும். தற்போது அவையே நடைபெற்று வருகின்றது. அந்த தொனியில்; கலாநிதி சர்வேஸ்வரன்; வேலாயுதம் அவர்களும் செயற்பட்டு வருகின்றார். நாட்டை கட்யெழுப்ப இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை அவசியம்¸ இதனை உணர்ந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்

பாதிப்புக்கு உள்ளான அனைத்து பாடசாலைகளும் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யபடும்¸ அதற்கான ஆய்வுகள் தற்போது பொறியியலாளர்களினால் மேற்கொள்ளபட்டு வருகின்றன. மாணவர்களுக்கான சீர் உடைகள்¸ காலணிளை வழங்குவதற்கும் தேசிய பாடசாலைகள் மூலம் கல்வி அமைச்சினால் சேகரிக்கபட்ட பொருட்களும் பாதிக்கபட்ட மாணவர்களிடம் கையளிக்க நடவடிக்கைகள் மேற்க் கொள்ளபட்டு;ள்ளன. தற்போது இங்கு வழங்பட்ட நிவாரணங்களுடன் எங்களது சேவை நின்று விடாது பாதிக்கபட்ட அனைத்து மாணவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் அதற்கு எனது அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களும் செயற்பட்டு வருகின்றார் என்று கூறினார்.  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post