ethiri.com

மறப்போமோ தமிழ் இன அழிப்பை…?

ஒருபோதும் மறவோமே
ஓல தமிழ் வாழ்வை தான்
வடுவோடு நாம் நடந்த
வாழ்வியலை மறவோமே …

ஆண்டென்ன கடந்தாலும்
அதிகாரம் முளைத்தாலும்
சிங்களவன் கொலை வெறியை
சிரித்தே நாம் மறப்போமோ …?

ethiri.com

வெடி குண்டு உடல் கிடக்க
வேதனையை அது கிளப்ப
மருந்தின்றி நாமலைந்த
மாதங்கள் மறப்போமோ …?

கடு கதியாய் வான் வந்து
கண் மூடி குண்டெறிந்து
உயிர் குடித்த சிங்களவன்
இனவெறியை மறப்போமோ …?

வாலாட்டி நாம் அலைய
வாசல் படி நாயோ நாம் …?
முறை மாறி விளைந்த குல
மூதேவி இனமோ நாம் ….?

எவன் வந்து ஆண்டாலும்
இவன் கொலையை மறவோமே ….
நாளை வரும் சந்ததியும்
நன்றே பகை மறவாரே…..!

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் -27/05/2017
 

Related Post