ethiri.com

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் இறுதிச்சடங்கு நடத்த பணம் இல்லாத காரணத்தால் மகளின் சடலத்தை தந்தை ஒருவர் கழிவுநீர் ஓடையில் புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கான மாநிலத்தில் உள்ள மைலர்தேவபள்ளி பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடையில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மிதப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் பொலிசார், அந்த உடலை மீட்டு பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

ethiri.com

இதில் அப்பகுதியில் மே மாதம் தற்கொலை செய்து கொண்ட பவானி என்பவரது உடல் என தெரிய வந்தது.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், பவானியின் தந்தையை அழைத்து விசாரித்துள்ளனர். பொலிசாரில் மிரட்டலுக்கு பயந்து உண்மையை ஒப்புக்கொண்ட அவர், தெரிவித்த காரணம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பவானியின் தந்தை பெந்தையா கடன் தொல்லையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார். போதிய வருவாய் இல்லாதால் பவானி அக்கம் பக்கத்தில் சிறு சிறு திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனிடையே பவானியின் சகோதரர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது இறுதிச்சடங்கு நிறைவேற்றும் பொருட்டு பெந்தையா 50,000 ரூபாய் கடனாக பெற்றிருந்தார்.

இந்த கடனை அடைக்க முடியாமல் திணறி வந்த நிலையில் பவானி செல்போன் ஒன்றை திருடியதில், அதன் உரிமையாளர் வீடு தேடி வந்து கேவலப்படுத்திவிட்டு சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த பவானி அன்றிரவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏற்கெனவே கடனில் மூழ்கி தத்தளித்து வரும் பெந்தையா, மீண்டும் கடன் வாங்க திராணியற்ற நிலையில் நள்ளிரவு வரை காத்திருந்து பின்னர் வீட்டின் அருகாமையில் உள்ள கழிவுநீர் ஓடையில் மகளின் சடலத்தை புதைத்துள்ளார்.

சம்பவம் நடந்து 3 வாரங்களுக்கு பின்னர் கழிவுநீர் ஓடையில் இருந்து சடலம் மிதந்ததை அடுத்து இச்சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது. இதனிடையே பவானி உண்மையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெரிய வரும் எனவும், அதன் பின்னரே பெந்தையா மீது வழக்கு பதியப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post