ethiri.com

மலையகம் நுவரெலியா மாவட்டதில் சீரற்ற காலநிலையால் 217 குடும்பங்களை சேர்ந்த 874 பேர் பாதிப்பு

தொடர்ந்து பெய்து வரும் மலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 214 குடும்பங்களை சேர்ந்த 857 பேர் பாதிக்கபட்டுள்ளனர். 34 வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன். 12 முகாம்களில் 162 குடும்பங்களை சேர்ந்த 624 பேர் இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தேவையான அனர்த் உதவிகளை நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நடவடிக்கைகளளை மேற்க் கொண்டு வருகின்றது.

(இந்த புள்ளி விபரம் 02.06.2017 திகதி வரைக்குமானது)

ethiri.com

மலையகப் பகுதியில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தினால் நாளாந்தம் பல பாதிப்பக்கள் ஏற்பட்டு வருகின்றன. பெரும்பாளான பகுதியில் பாரிய முகில் கூட்டங்கள் காணப்படுகின்றன. அத்துடன் குளிர் நிலையும் அதிகரித்துள்ளது. பெரும்பாளான பகுதிகளின் மண்சரிவுக்கு காரணம் அபிவிருத்திக்காக மண் மேடுகள் வெட்டப்பட்டுள்ளமை என ஆய்வாலர்ள்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பாரிய பாதை வெடிப்பக்கள் ஆங்காங்கே இடம் பெற்றள்ளன. கடுமையான குளிர் காரணமாக தோட்ட தொழிலாளரகள் பெரும் இன்னல் நிலை எதிநோக்கி வருகின்றனர். தொழில்களுக்கு செல்ல முடியவில்லை சென்றதும் தொழில் செய்ய முடியவில்லை விவசாய்pகளுக்கும் பாரிய நட்டங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர் காலத்தில் பாரிய மரக்கறி தட்டுப்பாட்டுக்கும் இடபெரும் என தெரிய வருகின்றது. பாதைகளில் பாரிய முகில் கூட்டங்கள் காணப்படுவதமினால் சாரதிகள் கவனமாக வாகனங்களை செலுத்தமாரு போக்கவரத்து சபையினர் தெரிவிக்கின்றனர் இன் நிலமைத் தொடர்ந்து பல நாட்களுக்கு காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கமாறு கோரியுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் பல இடர் அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் தாழ் நில பிரதேசங்களே பெரும்பாலும் பாதிப்படைந்துள்ளது. அண்மைக்காலமாக மலையக பிரதேசங்களிலும் பாரிய பாதிப்புகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாரான நிலையில் ஏனையோருக்கு வழங்கபடும் நிவாரனங்களும் மலையகத்தவர்களுக்கும் கிடைப்பது குறைவு என்று தான் கூற வேன்டும். இந்நிலையில் அடிக்கடி பெருந்தோட்டங்களை சார்ந்த தோட்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்து வருகின்றன. அந்தவகையில்

நிவாரணம்

நிவாரனங்களை பொறுத்தவரையில் அரச¸ அரசசார்பற்ற நிறுவனங்கள்¸ தொழிற்சங்கவாதிகள்¸ தோட்ட நிறுவாகங்கள்¸ நன்கொடையாளர்கள்¸ வணக்கஸ்தலங்கள் போன்றவை வழங்கி வருகின்றனர். அரசாங்கத்தினால் வழங்கப்படும் தோட்டமக்களுக்கான நிவாரனங்கள் மத்தகதியை நோக்கி செல்கின்றது இதனை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் அனர்;த்ததினால் பாதிக்கப்பட்ட பெறும்பாலான தோட்ட மக்களுக்கு இன்னமும் முறையான நிவாரனம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்டோறுக்கும்¸ பாதிப்படைந்த இடங்களுக்கும் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதிகள் தோட்ட மக்களுக்கும் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும.;

குளிரினால் (காற்றினால்) பாதிப்பு

பொதுவாக நுவரெலியா பிரதேசங்களில் ஏற்கனவே கடும் குளிர் தற்போது தொடர்ந்து பெய்துவரும் மலைக்காரணமாக மேலும் குளிர் அதிகரித்துள்ளது இதனால் தொழிலாளர்கள் தேயிலை மலையில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஒருநாள் சம்பளத்திற்கு தேவையான இறாத்தலையும் பெற்றுகொள்ளமுடியவில்லை தொடர்ந்து தொழில் செய்யவும் முடியவில்லை குழந்தை பெற இருக்கும் தாய்மார்களின் நிலையோ மேலும் கவலைக்கிடமாக உள்ளது பாடசாலை மாணவர்களும் ஒழுங்காக பாடசாலை செல்வதற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாடசாலை அதிபர்கள்; கூறுகின்றனர்.

வேலை வாய்ப்பு பாதிப்பு

ஒழுங்கான முறையான சம்பளத்தை பெற்று கொள்ள வேன்டுமானால் தொழிலாளர்களின் வருகையும் இறாத்தல் பெறுவதும் மிகவும் முக்கியமானதொன்றாகும். இதனை நிவர்த்தி செய்ய முடியாமலும் அதே வேலை தோட்ட நிர்வாகங்களினால் தொழில் வழங்குவதிலும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. இதனால் உற்பத்தி துறையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சற்று சுகயீனம் ஏற்பட்டதும் தொழிலாளர்கள் வருவது குறைந்துள்ளது. அத்துடன் அவர்கள் அடிக்கடி சுகயீனம் அடைவதாகவும் சில வைத்தியர்கள் கூறுகின்றனர் ஒழுங்காக வேலைக்கு சென்றால் தான் அடுத்தமாதம் முறையான சம்பளம் கிடைக்கும் காலநிலை மாற்றத்தினால் இதற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளார்கள். ஆத்துடன் ஏனைய அரசுசார்ந்த தொழிலாளர்களும் ஒழுங்காக வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி பாதிப்பு

தொடர்ந்து பெய்து வரும் மழைலக்காரணமாக தேயிலை உற்பத்தியில் மாத்திரம் அல்லாது விவசாய துறையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தேயிலையை பொருத்த வரையில் நல்ல விலைச்சல்; இருந்தும் அவற்றை முறையாக பயிற்றுக் கொள்ள முடியாத நிலையும் தொழிலாளர்களின் வருகையும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இரசாயன உரம் இரசாயன மருந்து பாவனை போன்றவற்றையும் பிரயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் ஏற்கனவே பாவிக்கபட்ட உரங்கள் மழையில் கழுவி செல்லப்பட்டுள்ளது என்று தோட்ட முகாமையாளர் கூறுகின்றார். இந்நிலை தொடருமாயின் ஏற்றுமதியில் தேயிலையின் செல்வாக்கு குறைய நிறைய வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகின்றது.

கல்வியில் பாதிப்பு

மூன்றாம் தவனை ஆரம்பமாகி வருட இருதி பரீட்சைக்கு சாதாரண தரப்பரீட்;சைக்கும் ஆயத்தமாகி கொண்டிருக்கும் இவ்வேலையில் பாடசாலைக்கு மாணவர்களின் வரவு நாளாந்தம் குறைந்து வருவதாக தெரியவருகிறது. இதற்கு காரணமாக குளிர்¸ முறையாக போக்குவரத்து இன்மை போன்றவை குறிப்பிடபடுகிறது. பெரும்பாலும் தோட்ட பாடசாலைக்கு தேயிலை தோட்ட வழியாகவும¸; காடுகள் வழியாகவும்¸ பஸ்¸ வேன் வழியாகவும் செல்ல வேன்டியுள்ளது. மழைக் காரணமாக இவையும் தனது சேட்டைகளை காட்டுவதாக தெரிய வருகின்றது.

மரக்கரி செய்கை பாதிப்பு

பெரும்பாலும் நுவரெலியா பிரதேசங்களிலேயே மறக்கரி உற்பத்தி செய்யபட்டு வருகிறது. மலைக்காரணமாக புதிதாக நாற்றபட்ட மறக்கரி நாற்றுகள் அழுகி வருவதாகவும் மறக்கறிக்கு போடப்பட்ட உரங்கள் மழை நீரினால் கழுவிச்செல்லப்பட்டு வருவதாகவும் தெறிய வருகின்றது. மற்றும் நாற்று மேடையில் பாதிப்படைந்து சில மறக்கரிகளில் அறுவடையும் குறைவாக இருப்பதாக தெறிய வருகின்றது. சிலர் விவசாயம் செய்வதற்காக ஏற்பாடு செய்த நிலங்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன் சில மறக்கறிகள் அறுவடை செய்து கொள்ள முடியாத நிலையும் விற்பனை செய்து கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெறிகிறது.

போக்குவரத்து பாதிப்பு

மழைக்காரணமாக வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக அதேவேலை அட்டன்¸ நுவரெலிய பிரதேசங்களில் முகில் கூட்டங்கள் அதிகரித்து உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு இலங்கை போக்குவரத்து பொலீஸார் கூறுகின்றனர.; அதேவேலை சில இடங்களில் போக்குவரத்து சேவையும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
நீர் நிலைகள் திறப்பு

தொடரும் மழையில் சில நீர் நிலைகள் அண்மையில் திறக்கபட்டன பின்னர் மூடப்பட்டன தற்போது சில நீர் நிலைகள் மழை நீர் நிரம்பி வருகின்றது இந்நிலை தொடருமானால் கொத்மலை¸ கம்பியன்¸ மவுசாகளை¸ விமலசுரேந்திர¸ காசல்ரீ போன்ற நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கவேன்டிய நிலை என நீர்தேக்க பொருளியலாளர்கள் தெறிவிக்கின்றன. இவ்வாரான நிலையில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மக்கள் அவதானத்துடன் இருப்பதுடன் தங்களையும் கங்களை சார்ந்தவர்களையும் பாதுகாத்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதொன்றாகும். இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக வானிலை மண்டலம் அவதான நிலையத்தினால் அடிக்கடி கூறப்படும் அறிவிப்புகளை கடைப்பிடிக்க வேன்டும். அத்துடன் இடி¸ மின்னல் போன்றவற்றினால் பாதிப்பு கள் குறைவாக இருந்தாலும் அவற்றினால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். குறிப்பாக நீரேந்து பகுதிகளில் சிறுவர்கள் செல்வதை தவிர்த்து கொள்வதோடு பெற்றோர் பிள்ளைகளை மிகவும் அவதானத்துடன் இருக்கவேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post