ethiri.com

வருட பொதுப்பலன்-மேஷம்…………..!!!!

தழைத்துக் குலுங்கும் மரங்களுக்கு ஆதாரமாக விளங்கும் ஆணி வேரைப் போல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காப்பவர்களே! யார் மனதும் நோகாமல் பேசும் நீங்கள், சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு கோடை மழையாக கொட்டுவீர்கள். மந்திரி முதல் அடிமட்டத் தொண்டன் வரை அனைவரின் திரைமறைவு வேலைகளையும் சுட்டிக் காட்டிப் பேசுவதால் உங்களை சிலர் அரை கிறுக்கன் என்பார்கள்! உங்கள் ராசிக்கு தனாதிபதியாகிய சுக்கிரன் 12வது வீட்டிலே உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஹேவிளம்பி ஆண்டு பிறப்பதால் வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். ஏற்கனவே வாங்கி வைத்திருக்கக்கூடிய வீட்டுமனையிலே வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். உங்களுடைய ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் அழகு, இளமை அதிகமாகும். உங்களின் பாக்யாதிபதியாகிய குருபகவான் 1.9.2017 வரை 6வது வீட்டிலே மறைந்து காணப்படுவதனால் அதுவரை செலவுகளும், அலைச்சல்களும், கடன் பிரச்னைகளும் இருந்து கொண்டே இருக்கும் 2.9.2017 முதல் 13.2.2018 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டிலே அமர்ந்து உங்கள் ராசியை நேருக்குநேர் பார்க்க இருப்பதனால் பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவீர்கள்.

ethiri.com

மன இறுக்கங்களெல்லாம் விலகும். மகளுக்கு தள்ளிப்போன திருமணம் வெகுவிமர்சையாக நடைபெறும். அரைகுறையாக இருந்த வீட்டை கட்டி முடித்து புது வீட்டிலே மகிழ்ச்சியாக குடிபுகுவீர்கள். வேலையும் கிடைக்கும். குழந்தை பாக்யமும் உண்டாகும். பழைய கடனை பைசல் செய்ய வழி வகைகளும் வந்து சேரும். ஆனால், 14.2.2018 முதல் 13.4.2018 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டிலே சென்று அமர்வதால் அந்த காலக்கட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போட வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரியை தாமதிக்காமல் செலுத்துவது நல்லது. உங்களுடைய ராசிக்கு லாபஸ்தானத்திலே 26.7.2017 வரை கேது அமர்ந்திருப்பதால் பிரபலங்களை பயன்படுத்தி முன்னேறுவீர்கள். மகான்களின் ஆசிர்வாதமும் உங்களுக்கு வந்து சேரும். பணவரவு உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும், உறவினர்கள், நண்பர்களுக்குள்ளே இருந்து வந்த மனத்தாங்கல் களெல்லாமே விலகும். 26.7.2017 வரை ராகு 5வது வீட்டிலேயே அமர்ந்திருப்பதனால் பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருந்து கொண்டேயிருக்கும். பூர்வீகச் சொத்து பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை ராகு உங்கள் ராசிக்கு 4வது வீட்டிலே அமர்வதால் அதுமுதல் தாயாரின் உடல் நிலை பாதிக்கும்.

தாய்வழி உறவினர்களால் அலைச்சல்களும், தர்ம சங்கடங்களும் வந்துபோகும். சிறு சிறு வாகன விபத்துகளும், பராமரிப்புச் செலவுகளும் வரும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 10வது வீட்டிலே வந்து அமர்வதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டே போகும். அதிகாரிகள் மற்றும் சகஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உத்யோகத்திலே விரும்பத்தகாத இடமாற்றமெல்லாம் இருக்கும். சனிபகவான் 18.12.2017 வரை உங்களுடைய ராசிக்கு எட்டாவது வீட்டிலே அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதனால் அதுவரை மனநிம்மதியற்ற போக்கும், பழைய கசப்பான சம்பவங்களை நினைத்தும் வருந்துவீர்கள். வீண் செலவுகளும் வரக்கூடும்.

திடீரென்று அறிமுகமாகும் நபர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகளும் செய்ய வேண்டாம். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. ஆனால் 19.12.2017 முதல் வருடம் முடியும் வரை சனிபகவான் 9வது வீட்டிலே வந்து அமர்வதால் அதுமுதல் காரியத்தடைகளெல்லாம் விலகும். இழந்த தொகையை மீண்டும் பெறுவீர்கள். வழக்குகள் சாதகமாகும். 14.4.2017 முதல் 26.5.2017 வரை சனியும், செவ்வாயும் நேருக்கு நேர் பார்வையிடுவதாலும், 12.7.2017முதல் 30.8.2017 வரை உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் நீச்சமாகி இருப்பதனாலும் 20.1.2018 முதல் 10.3.2018 வரை செவ்வாய் எட்டில் மறைவதாலும் 11.3.2018 முதல் 13.4.2018 வரை சனியும், செவ்வாயும் ஒன்று சேர்வதனாலும், இந்த காலகட்டத்தில் வீடு, மனை வாங்குவது, விற்பதிலே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீடு, மனை வாங்குவதாக இருந்தால் தாய்ப்பத்திரத்தை சரிபார்த்து விட்டு பிறகு சொத்து வாங்குங்கள். சகோதரங்களுடன் கருத்து மோதல்கள் வரும். 10.10.2017 முதல் 5.11.2017 வரை உள்ள காலகட்டத்தில் சுக்கிரன் 6வது வீட்டிலே சென்று மறைவதனால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல், வாகன விபத்து, தங்க ஆபரணங்கள் தொலைந்து போகுதல் போன்ற நிகழ்வுகள் நிகழக்கூடும். கவனமாக இருப்பது நல்லது. 17.11.2017 முதல் 15.12.2017 வரை சூரியனும், சனியும் எட்டாவது வீட்டில் அமர்வதால் இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம். பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்து மற்றும் பாகப்பிரிவினை விஷயமாக இந்த காலகட்டத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம். சுமுகமாக பேசி முடிவெடுப்பது மிகவும் நல்லது.

வியாபாரிகளே! 2.9.2017 முதல் குருபகவான் 7வது வீட்டில் நுழைவதனால் அந்த காலக்கட்டத்திலிருந்து புதிதாக முதலீடு செய்வீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்களெல்லாம் விலகும். அனுபவமிக்க வேலையாட்களை பணியிலே அமர்த்துவீர்கள். பங்குதாரர்களையும் மாற்றுவீர்கள். நியாயமான வாடகை அதே நேரத்தில் பெரிய இடமாக பார்த்து கடையை மாற்றுவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! உத்யோகத்தில் ஆகஸ்ட் மாதம் வரை வேலைச்சுமை இருக்கும். செப்டம்பர் மாதம் முதல் குருபகவான் ராசியை பார்க்கயிருப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். வெகுநாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வையெல்லாம் செப்டம்பர் மாதத்திலே நீங்கள் எதிர்ப்பார்க்கலாம். கூடுதல் சலுகைகளெல்லாம் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனத்திலும் வேலைக்கு முயற்சிக்கலாம்.

கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். 18.12.2017 வரை அஷ்டமத்துச் சனியிருப்பதால் அன்பாக பேசுபவர்களெல்லாம் நல்லவர்கள் என்று ஏமாறாதீர்கள். உங்களுடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் விட்டுக்கொடுக்க வேண்டாம். திருமண விஷயத்தில் பெற்றோரை மீறி எதையும் செய்ய வேண்டாம். ஜனவரி மாதத்திலிருந்து உங்களுக்கு வேலைகிடைக்கும், உயர்கல்வியிலும் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். திருமணமும் கூடிவரும்.

மாணவ, மாணவியர்களே! ஆகஸ்ட் மாதம் வரை விளையாட்டின்போது சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முன்கோபம் வேண்டாம். வகுப்பறையில் அரட்டைப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். செப்டம்பர் மாதம் முதல் மதிப்பெண்கள் அதிகமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். நல்லவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த கல்வி பிரிவில் சேருவீர்கள்.

கலைத்துறையினரே! அரைகுறையாக நின்ற வேலைகளெல்லாம் செப்டம்பர் மாதத்திலிருந்து விரைந்து முடியும். புதுப்பட வாய்ப்புகளும் வரும். தெலுங்கு, மலையாளம் மொழிப் படங்கள் மூலமாகவும் புகழடைவீர்கள். வருமானமும் கிடைக்கும். கடன் பிரச்னையிலிருந்து மீள்வீர்கள்.

அரசியல்வாதிகளே! ஆகஸ்ட் மாதம் வரை கோஷ்டி பூசல்கள் இருந்து கொண்டிருக்கும். செப்டம்பர் மாதம் முதல் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். எதிர்ப்பார்த்த பதவியும் கிடைக்கும்.

விவசாயிகளே! 18.12.2017 வரை அஷ்டமத்துச் சனி நீடிப்பதனால் அதுவரை பூச்சி, எலி தொந்தரவு இருக்கும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ள வேண்டாம். 19.12.2017 முதல் தொந்தரவுகளெல்லாம் குறையும். அடகிலிருந்த நகைகளையும் மீட்பீர்கள். இந்த ஹேவிளம்பி வருடம் முற்பகுதி அலைச்சலையும், செலவுகளையும் தந்தாலும், மையப்பகுதி மனநிறைவையும், பணவரவையும் தருவதாகவும், இறுதிப் பகுதி சுபச்செலவுகளாக அமையும்.

பரிகாரம்:

மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர் சக்கரத்தாழ்வாரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post