ethiri.com

கேழ்வரகு – முட்டைகோஸ் ரொட்டி

கேழ்வரகை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று கேழ்வரகு, முட்டைகோஸை வைத்து சத்தான ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த கேழ்வரகு – முட்டைகோஸ் ரொட்டி
தேவையான பொருட்கள் :

ethiri.com

கேழ்வரகு மாவு – 200 கிராம்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
முட்டைகோஸ் – 100 கிராம்,
பச்சைமிளகாய் – 6,
இஞ்சிச்சாறு – 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிது,
சீரகம் – 1 டீஸ்பூன்,
சின்னவெங்காயம் – 50 கிராம்.

செய்முறை :

* முட்டைகோஸ், சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிக்சியில் நறுக்கிய முட்டைகோஸ், பச்சைமிளகாயை சேர்த்து ஒரு சுற்று சுற்றி உதிரியாக எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரைத்த கலவை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், சீரகம், இஞ்சிச்சாறு, கொத்தமல்லித்தழையை சேர்த்து கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, லேசாக தேய்த்து, சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

* சத்தான கேழ்வரகு – முட்டைகோஸ் ரொட்டி ரெடி. 

Related Post