ethiri.com

புகையிரதக் கடவை காப்பாளர்களாக கடமையிலுள்ள ஊழியர்களுக்கு மாற்றீடாக சிவில் பாதுகாப்பு பிரிவினரை கடமையில் ஈடுபடுத்துவது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் என வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே.றொகான் ராஜ்குமார் தெரிவித்தார்.

வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ethiri.com

கடந்த மூன்று ஆண்டு காலமாக பொலிசாருடைய கட்டுப்பாட்டின்கீழ் ஒரு நாளைக்கு 250 ரூபா சம்பளத்துடன் மாதாந்தம் 7500 ரூபாவுக்கு எமது சேவையை செய்து வந்திருந்தோம் புகையிரதக் கடவைக் காப்பாளர்களாக சேவையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி பல போராட்டங்களை தொடர்ச்சியாக நாங்கள் செய்திருந்த போதும் இதுவரை எந்தவிதமான பதிலும் தராத போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்கள் புகையிரத கடவை ஊழியர்களுக்கு மாற்றீடாக சிவில் பாதுகாப்பு பிரிவினரை கடமையில் அமர்த்துவதாகவும் எங்களை புறக்கணிப்பதாகவும் அறிவித்திருக்கின்றார்.

இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். எங்களது பிரச்சனைகள் குறித்து போக்குவரத்து அமைச்சுஇ புகையிரதத் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் போன்றன கண்டகொள்ளாத நிலையில் அகில இலங்கை புகையிரத காப்பாளர் ஒன்றியம் மற்றும் வடக்கு கிழக்கு புகையிரத காப்பாளர் ஒன்றியத்தினை அழைத்து பேச்சுவார்த்தை ஊடாக தீர்வினை பெற்றுத்தருவதாக அழைத்து ஆறு திணைக்களகங்களை சேர்ந்த 24 அதிகாரிகளுக்கு முன்பாக எங்களை அச்சுறுத்தி அவமானப்படுத்தியது தொடர்பாக பல முறைப்பாடுகளை பொலிசாரிடத்திலேயும் மனித உரிமைகள் ஆணையத்திடமும் சமர்ப்பித்திருந்தோம் அத்துடன் இது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாகவும் தெரியப்படுத்தியிருந்தோம்.

இந்த நிலையில் நீதித் துறைகூட எங்களை புறக்கணிக்கிறது என்பது மிகவும் மன வேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது முழுமையான விடயங்களை உள்ளடக்கி கடந்த 15-10-2016 ஆம் ஆண்டு எழுத்து மூலமான முறைப்பாடு ஒன்றினை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களுக்கு முன்வைத்திருந்ததுடன் அம்முறைப்பாட்டினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நீதித்துறையின் ஊடாக நீதியை பெற்றுத்தருமாறு கோரியிருந்தோம்.

ஊழியர்களுடைய உரிமை மறுக்கப்படுவதுடன் மனித உரிமை மறுக்கப்படுவதுடன் இம் மறைப்பாடானது மாவட்ட நீதிமன்றம் நீதிபதி மற்றும் மேல் நீதிபதிக்கு நாங்கள் பதிவுத் தபாலிலே அனுப்பி வைத்திருந்தோம் இருந்த போதிலும் எந்தவிதமான பதிலும் நீதிமன்றத்தின் ஊடாகவும் கிடைக்கவில்லை என்பது மிகவும் மன வேதனையளிக்கின்றது.

போக்குவரத்து அமைச்சரின் கருத்தானது 2638 ஊழியர்களின் குடும்பங்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தும் எங்களை சேவையிலிருந்து வெளியேற்றுவது அடிப்படை மனித உரிமை மீறல் என தெரிவித்தும் இவ்விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார்.

Related Post