உன்னை தமிழா நீ ஆளு ….!

அயலான் வந்து ஆண்டிடவோ
அடிமையாய் தமிழன் மாண்டிடவோ ..?
வந்தான் முதுகில் ஏறிடவோ- நீ
வாடிடும் குதிரையாய் ஓடிடவோ ..?

இது தான் உந்தன் விதி என்றால்
இருப்பாய் தமிழா நெருப்பாயோ …?
வீழ்ந்தாய் போதும் இனி எழுவாய்
விடுதலை காண நீ விழிப்பாய் …..

ஆண்டவன் அயலான் ஒழியட்டும்
ஆக்கினை மண்ணில் நீங்கட்டும்
புதிதாய் தமிழும் செழிக்கட்டும்
புறப்படு தமிழா உன் வழியே …..

சேர ,சோழ ,பாண்டியனே
செருக்கோடு தந்த ஆட்சியினை
வாடா தமிழா நீ அமைப்பாய்
வாஞ்சையோடு நீ நடப்பாய் ….!

– வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -23/05/2017
 

Related Post