பிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்

லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள் இங்கு போன்றவற்றை இங்கு கொட்டப் போகிறேன்.
2
காலை 9 மணிக்கு வேலை. அதை வேலை என்று சொல்வதைவிட ஜெயில் என்றுதான் சொல்ல வேண்டும். இரவு 9 மணிக்குத்தான் வேலை முடியும். ஆனா சம்பளம் வெறும் 900 யூரோ.
3
அடுத்த மாசம் 6 ம் திகதி அம்மாவுக்கு பிறந்தநாள் வருது. அதுக்கு ஆசையா ஒரு சாறியும் ஒரு கா பவுண் சங்கிலியும் செய்து போடோணும்.
ஆனா என்ர வண்டியன் முதலாளி இந்த மாத சம்பளத்தை, அடுத்த மாசம் 20 ம் திகதிதான் தருவான். பிச்சைக்கார நாய்ய்ய்.
எதுக்குத்தான் கடை நடத்திறானோ?
4
என் முதலாளி அடிக்கடி கேப்பான் ‘உனக்கு அசெட்டிக் வருதோ?’ ‘ஏ எம் பி தள்ளுதோ?’
அது அரசாங்கம் தாற காசு. அத நான் எடுத்தால் என்ன? எடுக்காட்டி என்ன? இந்த நாய்க்கு ஏன் இவ்வளவு அக்கறை?

5
இப்போது சாப்பாட்டு நேரம். வெறும் 15, 20 நிமிடத்தில் அவக் அவக் என்று சாப்பிட்டு விட்டு, அடிமை வேலைக்கு திரும்ப போகோணும்.
ஆனா என்ர முதலாளி வண்டியன், வீட்ட போய் திண்டிட்டு நல்ல கொறட்டை விட்டு தூங்கிட்டு 6 மணிக்கு வருவான்.
6
என்னுடைய முதலாளி ஒரு வண்டியன். அவன் என்னை பதியாமல் தான் வைச்சு வேலை வாங்குறான். அதால அரசாங்கத்துக்கு கட்டுற காசு அவனுக்கு மிச்சம்.
அந்தக் காசில கொஞ்சம் சம்பளத்தை கூட்டி தரலாம் தானே? எருமை மாடு… தரவே மாட்டான்
7

இந்த நாட்டி சட்டத்தின்படி ஒரு கிழமைக்கு 35 மணித்தியாலம் வேலை செய்தால் போதும். ஆனால் என் தமிழ் முதலாளி,
வண்டியன் என்னை கிழமைக்கு 72 மணித்தியாலம் பிழிஞ்சு எடுக்கிறான். ஆனா சம்பளம் 900 யூரோ மட்டும் தான்.
6
மே 18 ஊர்வலம் போறதுக்கு 1/2 நாள் லீவு கேட்டேன். அதுக்கு என் முதலாளி வண்டியன் சொன்னான் ‘நீர் ஊர்வலம் போறதால செத்தவன் உயிரோட வரப் போறானா?’ என்று.
நாட்டுப் பற்று இல்லாத நாய் என் முதலாளி வண்டியன்.
9
நான் செய்யும் வேலைக்கு எனக்கு மாசம் 2500 யூரோ தரோணும். ஆனா என்ர முதலாளி பானை வண்டியன் 900 யூரோதான் தாறான். பரதேசி
10
கடைக்கு யாராவது வெள்ளைத் தோல் வந்தா என்ர முதலாளி பானை வண்டியன் ரென்சன் ஆகிடுவான். ‘அவன் ஏன் கனநேரம் நிக்கிறான். ஆள வைச்சிருக்காத உடன அனுப்பு’ எண்டு எங்கள போட்டு கரைச்சல் பண்ணுவான்.

யாரோ கொன்றோல் வந்திருக்கிறான் எண்ட பயத்திலதான் மூதேவி இப்படி ரென்சன் ஆகிறவன்.
செய்யிறது முழுக்க பிறாடு வேலை. அப்ப பயப்பிடத்தானே வேணும்?

இதை முக நூலில் ஒருத்தர் எழுதினதை நமது கவனத்திற்கு சிலர்
கொண்டு வந்தனர் அதனை அப்படியே இங்க போடுறம் ..
(இப்படியான புதினங்களை விடாம விடியோவோடா அனுப்புங்கோ விழுந்தடித்து போடுவோம் …) 

Related Post