( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . ) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருடன் மாணவி ஓட்டம் மேலும் படிக்க இதில் அழுத்துங்கள்

துப்பாக்கி முனையில் இளம் பெண்களை மிரட்டிகற்பழித்த கும்பல்

ethiri.com

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ளது நவாலா கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் அருகில் உள்ள ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளனர். அப்போது ரேசன் டீலரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அந்த சிறுமிகளை ஒதுக்குப்புறமான இடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சிறுமிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 22ம் தேதி நடந்துள்ளது.

வீடு திரும்பிய சிறுமிகள் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இரண்டு சிறுமிகளையும் பலாத்காரம் செய்த ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் ராஜன், சச்சின், ரோகித் மற்றும் அங்கித் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், குற்றவாளிகள் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என முசாபர்நகர் சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next
பெண்களுடன் காதல் முறிந்தால் இப்படி பண்ணுங்க எல்லாம் சரியாகிடும் -மேலும் படிக்க இதில் அழுத்துங்க

Related Post