செக்ஸ் தொல்லை கொடுத்த சாமியாரின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த இளம் பெண்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பேட்டை பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், தனக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த சாமியார் ஒருவரின் பிறப்பு உறுப்பை கடந்த 19-ந் தேதி துண்டித்தார். சட்டக்கல்லூரியில் பயின்று வரும் அந்த மாணவியின் துணிச்சல் மிகுந்த இந்த செயலை மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

எனினும் இளம்பெண்ணின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூர் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கடந்த 8 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்த அந்த இளம்பெண், சட்டத்தை கையில் எடுப்பதற்கு பதிலாக போலீசை அணுகியிருக்க வேண்டும். நமக்கு, நீதி தாக்கம் செலுத்தும் ஒரு சமூகமே தேவை. மாறாக ஒவ்வொரு தனி மனிதரும் கையில் கத்தி எடுக்கும் சமூகம் தேவையில்லை’ என்றார்.
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post