ethiri.com

ஆணையிறவில் புலிகள் அள்ளிய 31 ஆட்லொறிகள்- சிங்கள் இராணுவ தளபதி அவிழ்த்த மர்மம் ………………………

தமிழீழ விடுதலை புலிகள் மரபு வழி படையணியாக மாற்றம் பெற்று மரபு வழி போரை
குறியீட்டு பெயருடன்ந டத்தி வந்தனர் .
கெரில்லா போர் முறையில் இருந்து மாற்றம் பெற்று மரபு வழி படையணியாக ஆகாய வெளி
சமர் மூலம் உருவாக்க பெற்றனர் ,இவ்வாறு பல தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு மாபெரும்
வெற்றியை தழுவினர் .

இறுதியாக நிகழ்ந்த ஓயாத அலைகள் மூன்று தாக்குதலின் போது குடராப்பு தரை இறக்கத்தின்ஊடாக ஆணையிறவில் நிலை
கொண்டிருந்த இருபதாயிரம் படைகளும்
ஓட ஓட விரட்டியடிக்க பட்டனர் .
இந்த இராணுவ முகாம் மீள் படுத்தலின் போது புலிகளின் ஆயுத பலம் சிங்கள இராணுவம் வழங்கிய ஆயுதங்களின் ஊடாக பல்கி பெருகியது

ethiri.com

இந்த சமரில் மட்டும் முதன் முதலாக புலிகள் பத்துக்கு மேற்பட்ட நூற்றி ஐம்பத்திரண்டு மில்லி மீட்டர் ஆட்லொறிகளை மீட்டனர் இவையும் முப்பத்தி ஐந்து மைல்
தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டவை .

இதில் புலிகள் அள்ளிய முப்பத்தி ஒரு ஆட்லொறிகளில் இருபது 122 மில்லி மீட்டர் என்பது என முக்கிய இராணுவ படை தளபதி ஒருவர்
போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் முக்கிய தனது வெளிநாட்டு நண்பர் ஒருவருக்கு தெரிவித்துள்ளார் .

இது போல புலிகள் மேற்கொண்ட சில தாக்குதலில் குறிப்பாக ஆட்லொறிகளை கைப்பேற்றும் நோக்குடன்
நடத்த பட்ட தாக்குதலில் அவர்கள் வெற்றி பெற்றனர் எனவும் ஆனால் அதில் மீட்க பட்ட அந்த பீரங்கிகள் விபரத்தை வெளியிடாது
மறைத்ததாகவும் அவர் தெரிவித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .
இது தொடர்பான பல விடயங்களை விரைவில் வெளியிடுவோம் .

உறங்கு நிலையில் கிடந்த இந்த வரலாற்று பதிவுகள் தமிழர்கள் மத்தியில் புலிகளின் மரபு வழி ,கெரில்லா ,
சமர் தொடர்பில் புலிகளின்ஊடறுப்பு தாக்குதல் தன்மையின் போரியல் உச்சத்தை காணமுடியும் ,.

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post