ethiri.com

வீழ்ந்தாய் நீ விடுதலை சரிந்தது …!

ஏறி நீ நடந்த களம்
எங்கள் வசமானதடா
விடி வெள்ளி நீ நடந்தால்
விடுதலையும் கூடுமடா …

ஆழ புலி விரிந்த களம்
அத்தனையில் நீ இருந்தாய்
போருக்கெல்லாம் முதல் ஆன
போர் விதியாய் நீயானாய்

ethiri.com

லீமா என்ற குரல் ஒலித்தால்
பிரம்மாக்கள் பல பிறப்பார் ….
பால்ராஜ் களம் இருந்தால்
பல்லாயிரம் பகை குவிவான்

குந்தி விட்டால் இவன் கிளம்பான்
குலதுங்கன் களம் விடுவான் …..
வீரத்தின் சக்கரமே
விவேகத்தின் கதிரொளியே

நீ இல்லா கள முனைகள்
நீறாகி போனதடா …..
வீழ்ந்து நீ போனதனால்
விடுதலையும் தொலைந்ததடா ……!

-வன்னி மைந்தன் – (ஜெகன் )
ஆக்கம் -20/05/2017

 

Related Post