ethiri.com

சீ ..என்னை விட்டு போ …!

காற்றை போலென்ன வந்தென்னை
கட்டியே தழுவுகின்றாய் – என்
உத்தரவு ஏதுமின்றி – எப்படி
உருட்டியே கொஞ்சிடுவாய் …?

காட்டியே உன் உடலை – என்னை
களைப்புற செய்து விட்டாய் – இனி
ஆக்கினை தந்துமே என்னை
ஆட்டியே படைத்திடுவாய் …..

ethiri.com

நாட்டிலே பல மாந்தர் உண்டு
நாடியே சென்றிடுவாய் …..
வீட்டிலே நானொருவன் – தனி
விட்டிடு விட்டிடு என்றேன் ….

கூட்டிலே நான் தனி என்றோ
கூடியே வந்து விட்டாய் ….
வீட்டிலே நான் தனி என்றே
விடயம் எப்படி தெரிந்து வந்தாய் ….?

காட்டிலே நான் மறைந்தாலோ – எப்படி
கண்டு கொள்வாயோ…?
கூட்டியே போகவே இருள் வருமே – நீ
கூண்டை விட்டே போயிடுவாய் …!

– வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -19/04/2017 

Related Post