ethiri.com

சீனாவுக்கும் – தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கத்திற்கும் இடையில் மீண்டும் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளது.

இலங்கைக்கு சீனா வழங்கும் கடன்களுக்கான வட்டி தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்தே இந்த புதிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் சீரான கொள்கையை கொண்டிருக்க வேண்டும் எனவும் அரசாங்கம் மாற்றமடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த கொள்கைகள் மாற்றமடையக் கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள கொழும்புக்கான சீனத் தூதுவர், சீரான கொள்கைகளை பின்பற்றத் தவறினால் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை இலங்கை அரசாங்கம் இழக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

ethiri.com

கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த சீனத் தூதுவர் யீ ஷியாங்லியாங், இலங்கைக்கு சீனா வழங்கிய கடன் அதிக வட்டிக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்தார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து எந்தவொரு தருணத்திலும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்துரையாடவில்லை எனவும், அவ்வாறு கடன்களை பெறுவதில் மகிழ்ச்சி இல்லையாயின் பணத்திற்காக சீனாவை ஏன் ஸ்ரீலங்கா தொடர்ந்தும் நாட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைக்கு 2 வீத வட்டி அடிப்படையிலேயே கடன்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ள சீனத் தூதுவர், ஏனைய நாடுகளை போல் 5 வீத வட்டிக்கு கடனை இலங்கைக்கு வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தொடர்பான தமது பங்களிப்பு மற்றும் தமது நாடு தொடர்பில் தவறான எண்ணப்பாடு இலங்கையிலுள்ள ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ள சீனத் தூதுவர், இலங்கை விடயத்தில் தமது நாட்டிற்கு எந்தவொரு மறைமுக நிகழ்ச்சி நிரல்களும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைமுக நகர திட்டத்தில் சீன நிறுவனத்துடன் எந்தவொரு நாடும் இணைந்து பணியாற்ற முடியும் எனக் குறிப்பிட்ட சீனத் தூதுவர், இந்த திட்டத்தினால் சுற்றாடலுக்கு தாக்கங்கள் ஏற்படும் என வெளியிடப்பட்ட அச்சத்தை அடுத்து, புதிய அரசாங்கத்தால் கொழும்பு நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு, அது மீண்டும் ஆரம்பிக்கப்படும் வரையான காலபகுதியில் 140 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை சீன நிறுவனம் எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கையில் சீனா எந்தவொரு தவறான விடயங்களையும் செய்வில்லை என வலியுறுத்திக் கூறியுள்ள சீனத் தூதுவர், இலங்கையுடன் தமது நாடு கொண்டிருக்கும் நட்புறவுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post