ethiri.com

வெள்ளையனால் வீழ்ந்த தமிழ் வீரம் …!

எட்டு ஆண்டு எட்டிருச்சு
எட்டா தீர்வும் செத்திருச்சு ..
மாண்டவர் உயிர்க்கு என்ன விலை – அந்த
மரண கொலையோ என்ன நிலை ..?

கொன்றான் வெள்ளையா ஊர் சுற்ற
கொடுங்கோல் ஆட்சி ஆவன் காக்க …..
வெள்ளை வேட்டிகள் கொறட்டையிட
வெந்த தமிழன் அழுகின்றான் …

ஒற்றை தமிழன் அவன் அழிக்க
உலகே திரண்டே வந்தனரே ….
கொன்றான் இவனை தூக்கிலிடா
கொள்ளை புறத்தில் மறைந்ததென்ன ..?

சின்ன தமிழன் இவன் என்றே
சிரித்து நகைத்து செல்கின்றீர் …..
சீறும் புலியாய் இவன் உலவ
சிறையில் தானே நீர் கிடந்தீர் ….

கொள்ளையர் கூட்டம் நீர் என்று
கொன்றதன் பின்னர் நாமறிந்தோம் ….
வெள்ளை தோலால் ஏமாந்து – தமிழன்
வெற்றியை அவனே பறி கொடுத்தான் …!

– வன்னி மைந்தன்-
ஆக்கம் -10/04/2017 

Related Post