ethiri.com

என்னை கொன்று விடு …!

எரியுது இங்கொரு நெஞ்சு
ஏன் என்று கேளாயோ ..?
உரியது விழியில் கண்ணீர்
உன்னால் புரிவாயோ …?

பருகிட பாலது தந்தாய்
பல்சுவை கலந்தே இட்டாய்
இது நொடி வேகம் எறிவாய் என்று
இதயத்தில் என்னிடவில்லை …..

ethiri.com

ஒருமுறை பருகி விட்டால்
ஓடையில் எறிவாயோ ..?
இது தான் உந்தன் விதி என்றால்
இதயம் ஏன் கவர்ந்தாயோ …?

அழுகிறேன் முன்னே பாராய்
ஆறுதல் கூறாயா…?
தேறிட நல் மொழி நாலு
தேடியே சொல்லாயா…?

மறந்திட வேண்டின்
மனமே ஏன் இதயம் நுழைந்தாயோ ..?
ஈர் விழியோ நீரில்
இதயம் வலிக்க ஏனோ வைத்தாயோ …?

– வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -19/04/2017

 

Related Post