ethiri.com

வெடி பொருட்களுடன் பீகாரில் இரண்டு மாவோயிஸ்டுகள் கைது

அதிகளவு வெடி பொருட்கள் வைத்திருந்த இரண்டு மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தின் சர்கா பத்தார் காவல் நிலைய எல்லைக்குள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

உளவுத்துறை வழங்கிய தகவலின் படி புதியாகர் கிராமத்தில் இரண்டு மாவோயிஸ்டுகளும் சுற்றி வளைக்கப்பட்டனர் என போலீஸ் சூப்பிரண்டு ஜயண்ந் கந்த் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் அதிகளவு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ethiri.com

அதன்படி இரண்டு கார் வெடி குண்டுகள், நான்கு இரும்பு கம்பிகள், மூன்று மின்னணி டெட்டநேட்டர்கள் மற்றும் கேடு விளைவிக்க கூடிய பொருட்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் ஏராளமான நக்சல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post