ethiri.com

கணவன் மனைவி சண்டை ….!

ஆடி வெயிலடி ஆளை கருக்குதடி
ஆடி வாறேனடி ஆடி கூழு தாவனடி
ஊத்த கூழுக்கு தான் உறையில ஏதுமில்லை
ஊத்தி வாரவரே ஏதும் கொண்டு வாரும் …

அடி பையில் ஏதுமில்லை கையில் தேறவில்லை
ஆத்தில ஊதிக்கிரன் அடியே பாத்துக்கிறன்
காய்ந்து உழைப்பவரே கள்ளுக்கு கொட்டுறியே
காய்ந்து வீடிருக்க கையை ஏந்திறியே….

ethiri.com

முன்ன காதலில தோற்றேன் என்ன பண்ண
முன்ன உன்னை பாத்திருந்தா ஏண்டி ஊத்திக்கிறன்
காரணம் கண்டு பிடி கல்லை தேடுகிறேன்
கல்யாணம் ஆனா பின்னும் காதலி மறக்கலையோ ..?

போதையில உளறி விட்டன் பேதையை மறந்து விட்டன்
பேயாய் மாறிடாதே நான் பெரிசா என் சொல்லிவிட்டேன்..?
ஆடவன் ஆகி விட்டாய் அடே ஓடி போயிடுவாய்
அரிவாள் கையிருக்கு அறுத்தே போட்டிடுவேன் ……

காலை தேடுகிறேன் கண்ணம்மா காட்டி விடு -என்
காதல் தேவதையே உன் கன்னத்தை தந்து விடு
அடியே வெட்கம் பாரு ஐஸா உறைந்து போனாய்
ஆடிய கோபம் காணோம் அன்பாய் கூடி விட்டாள்….~!

– வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -12/05/2017 

Related Post