ethiri.com

பெண் பிள்ளை பெற்ற தந்தையின் புலம்பல் …!

அத்தானவன் வேலை போக
அக்கம் பக்கம் போகா தடி …
ஆரும் வந்து கை பிடிச்சா
அறுத்து தாலி எறிவாண்டி….

பெத்த புள்ளை உன்னைத் தானே
பெரும் பாடா கரை சேர்த்தேன் ….
அப்பன் இவன் செத்திடுவன்
அடி அக்கம் பக்கம் போகாதடி ….

ethiri.com

புத்தி கெட்டு போகாதடி – உன்
பொட்டழித்து போவாதடி …..
பக்குவமா நான் வளர்த்து
பாவியிடம் கையளித்தேன் ….

குரங்கு கையில் மாலையாகி
குமரி மகளே போகதாடி …..
சின்ன வயசு உந்தனுக்கு
சின்னவளே புரிஞ்சுக்கடி …..

பெற்றவரை கண்ணீரிலே
பிறந்தவளே வைக்காதே …..
கை பிடித்து கெஞ்சுகிறேன்
கடவுளே இவளை காத்து விடு ….!

– வன்னி மைந்தன் -( ஜெகன் )
ஆக்கம் -12/05/2017

 

Related Post