ethiri.com

சா வரும் போதில் …..!

மனம் வாடி துவண்டிடும் வேளையிலே
பலர் ஆடி நகைத்தார் காண்பாய் – உலகை
மோதி மீள் எழான் என்றே
ஆடியே கழித்தார் நன்றாய் ….

கூட்டியே அள்ளும் புயலாய்
கூடியே வந்தேன் திகைத்தார் …
காரிய கூத்தர் ஆனார்
கை பிடித்தே நடக்க நினைத்தார் ….

ethiri.com

வாடியே வாழ்வில் எழுந்தான்
வழி மாற்றியே ஓடி நின்றான் ….
சாதல் வரும் வரை தனியே யான்
சாந்தமாய் உலகில் நடப்பேன் ….

பணம் இன்றியே வாடி கிடப்பர்
பசி போக்கியே வாழ்வில் உயர்வேன் ….
ஏதொரு தடைகள் வரினும்
எழுந்தே இதற்காய் உழைப்பேன் …

நோ வரும் உடலில் முன்பே – யான்
நோக்கும் வழியை காண்பேன் ….
ஈர் விழி மூடிடும் நேரம் – யான்
ஈர்த்தவை இலவசம் தருவேன் ….!

– வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -18/04/2017

 

Related Post