ethiri.com

பிரபாகரன் போல் யார் வருவார் …!

அண்ணன் பிராபா இல்லை என்றால்
அவனே எங்கள் இறைவனடா
அவனே இங்கு உண்டென்றால்
அவனே எங்கள் தலைவனடா ….

காக்கும் கடவுள் ஆனவனே
களவு, துன்பம் தொலைத்தவனே
ஆக்கி வைத்த சட்டமதில்
அந்தோ நன்றே வாழ்ந்தோமே ….

ethiri.com

துணிவு ,பணிவு இவன் தந்தான்
தூர பார்வை இவன் வைத்தான்
ஆக்கினை களத்தில் வீழ்கையிலே
அடிகளை சொல்லியே அவன் தந்தான் …

செய்த பின்னே சொல் என்றான்
சொல்லுக்கு அதுவே பெருமை என்றான்
இவன் போல் தலைவன் இனி வருமோ
இல்லை என்றே பதில் வருமே …..!

– வன்னி மைந்தன் (ஜெகன்)
ஆக்கம் – 07/05/2017

 

Related Post