ethiri.com

ஓடிப் போன காதலால் ஒருத்தி அழுகின்றாள் ..!

கல்லாய் போன காதல் ஒன்றால்
கண்ணில் கண்ணீர் கண்டேன் ….
கட்டி வைத்து புன்னகையை
கல்லாய் தானே நின்றேன் ..

ஆசை பட்டு வாலிபத்தில்
அன்று முளைத்த காதல் ….
ஆயுள் பூரா இன்பங்களை
அடகுவைத்தேன் பாவம் …

ethiri.com

கர்ப்பை தின்று கருவை தந்து
கையை விட்டான் பாவி …..
அப்பன் இல்லா பிள்ளையாக்கி
அயலை விட்டான் கூவி ….

கற்பனையில் எண்ணா ஒன்றை
கையில் தந்தான் ஓடி …..
காதலாலே ஆகி போனேன்
காலம் யாவும் வாடி ….

ஊரும் என்னில் உமிழத்தானே
ஊர்வலமாய் நடந்தேன் …..
உள்ளம் உள்ளே எந்தன் வலியை
உணர்ந்து கொண்டார் யாரோ …?

– வன்னி மைந்தன் (ஜெகன்)
ஆக்கம் – 07/05/2017

 

Related Post