ethiri.com

இவரை கொலை செய் ….!

கண் கட்டி கை கட்டி கற்பழித்தார்- இவள்
கண்ணீர்க்கு என் பதில் சொல்லிடுவார் ..?
பத்து பேர் உறவான பாலியல்
பலியான பாவைக்கு நீதி சொல் ….

புண் பட்டு அவள் பூவும் நொந்தது
புண் வலியாலே விழியில் நீர் தந்தது
அலறலை கட்டியே அவள் தின்றார்
அலறவே கொன்றிட ஏன் மறந்தார் …?

ethiri.com

ஆண்டென்ன கிட்ட தான் இரண்டாச்சு
ஆனாலும் தீர்வு என்னாச்சு …?
கறுப்பு சட்டைக்கும் லஞ்சமோ
கரியாரால் இவளுக்கும் வஞ்சமோ …?

யாழ் மண்ணே நீதி சொல்லாயோ
யாழிடை இவர் வெட்டி வீசாயோ ..?
ஏதடா நீதியா நீதி சொல்
எமனே நீ தான் இவர் கொல்…!

– வன்னி மைந்தன் (ஜெகன்)
ஆக்கம் – 07/05/2017

கட்டி,வைத்து கற்பழித்து கொலை செய்ய பட்ட தங்கை வித்தியாவுக்கு சமர்ப்பணம் ..! 

Related Post