ethiri.com

அழுகின்றேன் …!

விழியில் நுழைந்து நீர் பறிக்கும்
வித்தை நல்லா தெரிந்தவளே ….
வறண்ட பயிர்கள் செழித்திட தான் -இமை
வாய்க்கால் வெட்டி நீர் கடத்து ….

வானம் வறண்டு மாண்டத்தினால் – என்
வாழ்வில் உனக்கு விளையாட்டு ………..
காதல் பேசி உளம் நுழைந்து
கண்ணீர் பறிக்க வெறியாட்டம்…..

ethiri.com

வலிகள் படர்ந்து அழுகின்றேன் .
வாடா நீயும் சிரிக்கின்றாய் ….
உன்னால் எனக்கு வாழ்வில்லை – நீ
உயர உனக்காய் அழுகின்றேன் …….

உடைவது எந்தன் மன நிலைதான்
உனக்காய் வாழ்தால் இஸ்டம் தான்….
நஷ்டம் எனகென்று ஆன பின்னே – நீ
நலமுடன் வாழ்தல் முறை தானே …!

– வன்னிமைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -10/04/2017 

Related Post