ethiri.com

மூன்றாம் நம்பர் காரர்களே [3, 12, 21, 30]இதோ உங்கள் புத்தாண்டுப்பலன் …………………!!!!

குரு பலத்திலும், அம்சத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு வாழ்க்கையின் திருப்புமுனை ஆண்டாக அமையும். மார்ச் மாதம் முதல் சீரான முன்னேற்றங்கள் ஏற்படும். மாமன் வகை உறவுகள் கை கொடுத்து உதவுவார்கள். பிள்ளைகள் வழியில் கல்வி மற்றும் சுப செலவுகள் ஏற்படும். கன்னிப் பெண்கள் சூழ்நிலை அறிந்து நடப்பது அவசியம். தோழிகளிடம் அதிக நெருக்கம் காட்டாமல் இருப்பது நலம் தரும். நீண்ட நாட்களாக கடல் கடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்.

சகோதர உறவுகளால் நெருக்கடிகள், செலவுகள் வரலாம். ஆன்மிக தாகம் அதிகரிக்கும். அடிக்கடி இஷ்ட தெய்வ ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். மாமனார் உடல்நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. மகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும். திசா புக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு நான்கு சக்கர வாகன யோகம் உண்டு. தேக்க நிலையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்தில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும். நண்பர்களால் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும்.

ethiri.com

யாருக்காகவும் சாட்சி கையெழுத்து, போடுவது வேண்டாம். ஆடல், பாடல் கலைத் துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். கண் சம்பந்தமாக உபாதைகள் வரவாய்ப்பு உள்ளது. கண்ணாடி அணிய வேண்டி வரலாம். உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். சிலர் புதிய நிறுவனத்தில் வேலையில் அமர்வார்கள். பணப்பொறுப்புக்களை கையாள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வியாபாரம் சீராகவும், சாதகமாகவும் இருக்கும். கொடுக்கல், வாங்கல் கைகொடுக்கும். வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்:

ஓம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி நமஹ‘ என்று தினமும் தியானம் செய்யலாம். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து வணங்கலாம். காது கேளாதோர், வாய் பேசாதோருக்கு உதவலாம்.
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post