ethiri.com

இலங்கை -மலையகம் செல்லும் நரேந்திர மோடி- இந்தியா மக்களுக்கு உதவுவாரா ..?

இலங்கையில் நடைபெரும் தேசிய நிகழ்விற்கு வருகைதர உள்ள இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மலையத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்க் கொள்ள உள்ளார். இதன் போது அட்டன் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையை திறந்து வைத்து பின் நோர்வுட் மைதானத்தில் நடைபெரும் பாரிய மக்கள் கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். இந்த சந்தர்பத்தை மலையத்தை சார்ந்தவர்கள் முறையாக பயன்படுத்தி மலையக பெருந்தோட்ட மக்களுக்கு ஒரு அர்த்தம் உள்ள அதே போல் பயன் உள்ளதாக்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகும். இது எனது தனிபட்ட கருத்தாகவும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் கருத்தாகவும் காணப்படுகின்றது. என்று நுவரெலியாலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கூறினார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.

தொடர்ந்து கல்வி இராஜாங்க அமைச்சர் அங்கு உரையாற்றுகையில் தற்போது மலையகம் உட்பட நாட்டின் பல பாகங்களில் சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து வந்த எமது மக்கள் 1.7 மில்லியன் பேர் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிரச்சனைகள் இன்று தேசிய அளவிலேயே பேசபடுகின்றது. சர்வதேசத்திற்கு செல்லவில்லை சர்வதேச நிலையில் எம் மக்களின் பிரச்சனை பேசும் போதே பிரச்சனைகள் தீரும். தற்போது மலையகத்தில் சலுகைக்கான அரசியலும் அபிவிருத்தியுமே நடைபெற்று வருகின்றது. உரிமைக்கான அரசியல் மங்கி வருகின்றது. எம் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கும். அவர்களின் வாழ்க்கை அபிவிருத்தியை நோக்கி செல்வதற்கும் இவ்வாறான தவைவர்களின் மலையகத்திற்கான வருகை பொருத்தமானதாக அமையும். அது சர்வதேச அளவிற்கும் செல்லும். நாங்களும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள். எமது அந்த தொப்புல் கொடி உரவாக பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வருகை தருவது ஏமக்கே பெருமையானது. அவரை வரவேற்பதில் மலையகம் சார்ந்த நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். இவரது வருகையை உரிமைகோருவதில் நாம் பிளவுபடக் கூடாது. இது மக்களை தான் பாதிக்கும். இதே போல் மக்களுக்கு பிரச்சனைகள் வரும் போது ஒற்றுமையாக செயற்பட்டால் வரவேற்க்கதக்க ஒன்றாகும். மலைய மக்கள் இந்தியாவில் இருந்து வந்தபடியால் எங்களின் பிரச்சனைகளை பாரத பிரமரிடம் எடுத்து கூர இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடப்பாடு பாரததிற்கும் உண்டு. இவரின் வருகை மலையத்தின் சரித்திரத்தில் பதிய வேண்டிய ஒன்றாகும். நாம் 200 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து வந்ததன் பின்னர் எம்மை கான இந்தியாவின் பிரதமர் மலையகம் வருவது வியப்பிற்கு உரிய ஒன்றூகும்.

ethiri.com

தற்போது மலையக அபிவிருத்திகளுக்காக இந்தியா பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செல்கின்றது அதனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உண்மையாக முதலில் நான் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும.; இலங்கை இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலம் தனது கிளை காரியாலயத்தை மலையகத்தில் கண்டியில் வைத்துள்ளது இதற்கு காரணம் மலையக மக்களுக்கு சேவை செய்வதற்காகவே. ஆரம்ப காலம் முதல் இந்திய இலங்கை காங்கிரஸ் உருவான காலம் முதல் இந்திய அரசாங்கம் பல்வேறுபட்ட வகையில் பல உதவிகளை வழங்கி வருகின்றது. இதனால் மலையக மக்களின் வாழ்வில் சுபீட்சம் ஏற்பட்டுள்ளது. கலை¸ கலாச்சாரம்¸ பண்பாடு¸ கல்வி¸ மற்றும் பொருளதார ரீதியில் பல உதவிகள் கிடைக்கபட்டுள்ளன. தற்போததைய நிலையில் தோட்ட மக்களுக்கு இலவசமாக 4000 வீடுகள் அமைக்கபட்டு வருகின்றது. டிக்கோயாவில் சகல வசதிகளையும் கொண்ட மாவட்ட வைத்தியசாலை¸ மலையகத்தில் 70 பிள்ளை பராமரிப்பு நிலையங்களின் அபிவிருத்தி¸ ஹட்டன் தொண்டமான் தொழில்பயிற்ச்சி நிலையம்¸ ஹெல்பொட தொழில் பயிற்;;சி நிலையம்¸ புஸ்ஸல்லாவையில் சரஸ்வதி மத்திய கல்லூரி 95 மில்லின் ரூபா நிதியில் அபிவிருத்தி¸ தேசிய ஆசிரியர் கல்லூரிகளில் கணனி கூடங்கள்¸ உட்பட பல்வேறுப்பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபட்டு வருகின்றன. எதிர்காலத்தில் மலையகத்தின் 50 பாடசாலைகள் 1000 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய்படவுள்ளன. அதற்கான நடடிக்கைகள் மேற்க்கொள்ளபட்டு வருகின்றது. மேலும் 20.000 வீடுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபட்டு வருகின்றன. இவற்றை எல்லாம் பாரத பிரதமரிடம் பேசி கேட்டு மேலும் அதிகரித்தக் கொள்ள வேண்டும் இதனையே நாம் அனைவரும் செய்ய வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாரத பிரதமரை வரவேற்போம் என்று கூறினார 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post