ethiri.com

இரண்டாம் எண்ணில்[2, 11, 20, 29] பிறந்தவர்களின் புத்தாண்டுப் பலன்கள்…………!!!

சந்திரனின் அம்சம் யோகத்தில் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு அமைதி, ஆனந்தம் இணைந்த ஆண்டாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். மகன் மகளுக்கு வசதியான இடத்தில் இருந்து நல்ல சம்பந்தம் கூடிவரும். சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணம் அடைவார்கள். பல ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இந்த வருடம் நிறைவேறும். ஆலய திருப்பணிகள் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும்.

வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வர வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நலம் தரும். ஆடல், பாடல் கலைத் துறையினருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மாமனார் உடல்நலம் பாதிக்கப்படலாம். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் அதிக முயற்சியின் பேரில் இடம் கிடைக்கும். கன்னிப் பெண்கள் இடம் பொருள் சூழ்நிலை அறிந்து நடப்பது நல்லது. நண்பர்களிடம் அதிக நெருக்கம் காட்டாமல் இருப்பது நலம் தரும்.

ethiri.com

மாமன், அத்தை வகை உறவுகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பேரன், பேத்திகள் மூலம் மகிழ்ச்சியும் செலவுகளும் உண்டாகும். அவசர தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். உத்யோகம் சாதகமாக இருக்கும். உங்கள் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதே நேரம் வேலைச்சுமையும் அதிகரிக்கும். வியாபாரம் விருத்தியாகும். கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். புதிய ஏஜென்சிகள் எடுப்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.

பரிகாரம்:

சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடலாம். அஷ்டமி அன்று பைரவருக்கு நெய் விளக்கு ஏற்றி வணங்கலாம். மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகத்துக்கு உதவலாம்.
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post