ethiri.com

லண்டனுக்கு ஏயன்ட் மூலமாக நுழைய முயன்ற இரு முல்லை வாலிபர்கள் ஈரானில் சுட்டு கொலை – கண்ணீரில் குடும்பம் -படம் உள்ளே

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி சென்ற இரண்டு நபர்கள் சாவடைந்ததாக தகவல் சம்பவம் தொடர்பாக மேலும் முல்லைத்தீவு உடுப்புக்குளத்தை சேர்ந்த பேரம்பலம்.மைதிலிபாலன் முல்லைத்தீவு செம்மலையைச் சேர்ந்த விஜயகுமார். பிரசாந்த் ஆகியவர்கள் கடந்த 11-12-2016 அன்று உள்ளுர் முகவர் ஒருவர் ஊடாக லண்டன் நாட்டிற்கென உள்ளுர் முகவர் வெளிநாட்டில் அதாவது லண்டனில் உள்ள முகவர் ஊடாக அனுப்பப்பட்டுள்ளார்கள் இவர்கள் இறுதியாக குடும்பத்தினருடன் ஈரானில் இருந்து தொலைபேசியில் 19-12-2016 அன்று உரையாடி தாங்கள் ஈரானில் இருப்பதாகவும் அங்கிருந்து வேறு நாட்டிற்கு செல்வதாகவும் தகவல் வழங்கியுள்ளனர் பின்னர் அன்றிலிருந்து எதுவித தொடர்புகளும்இன்றி இருந்துள்ளனர் 23-04-2017 அன்று இவர்களின் குடும்பத்தினர் கொழும்பிலுள்ள வெளிநாட்டுத்தூதரகத்துடன் தொடர்பு கொண்டபோது ஈரான் எல்லையை தாண்டிய போது இரண்டு பேர் சுடப்பட்டு அவர்களின் புகைப்படங்கள் காண்பித்துள்ளனர் அப்புகைப்படங்களில் அடையாளம் காணமுடியாத போதிலும் அவர்கள் தங்களின் வீடுகளுக்கு வந்து ஏனைய புகைப்படங்களை வைத்தும் உறவினர்கள் ஊடாகவும் மரணமடைந்தவர்கள் மேல் குறிப்பிட்டவர்கள் தான் என்பதனை75/; உறுதிப்படுத்தியுள்ளனர்

செய்தி – முல்லை வாசி

ethiri.com

லண்டனுக்கு ஏயன்ட் மூலமாக வருகை தந்த முல்லை வாலிபர்கள் இருவர் ஈரானில் சுட்டு கொலை - கண்ணீரில் குடும்பம் -படம் உள்ளே

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post