ethiri.com

பொறுமையைக் கடைப்பிடித்தால் பெருமை வந்து சேரும் என்று சொல்லும் கன்னி ராசி அன்பர்களே..!இதோ உங்கள் சித்திரை மாத பலன் …………!!!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன், மாதத் தொடக்கத்திலேயே பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார். உங்கள் ராசிக்கு 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு பகவான், புதன் வீட்டில் வக்ரம் பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் குரு வீட்டில் புதன் வக்ரம் பெற்றிருக்கிறார். புதனோடு தனாதிபதியாகவும், பிதுர்ரார்ஜித ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன் உச்சம் பெற்றுக் கூடியிருக்கிறார். இந்தப் புத- சுக்ர யோகம் ஒரு பொன்னான யோகமாகும். கசந்த காலங்கள் மாறி, வசந்த காலங்கள் வரப் போகிறது.

பார்க்கும் குருவால் பணவரவு திருப்தியாகும். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவர். தொழில் முன்னேற்றத்திலேயே குறியாக இருப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். முயற்சிகளில் இருந்த தடைகள் அகலும். பொருளாதாரத்தில் தன்னிறைவு கிடைக்கும். கல்யாணக் கனவு கைகூடும்.

ethiri.com

குருவின் பார்வை 5,7,9 ஆகிய இடங்களில் பதிகிறது. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். பட்டப்படிப்பை முடித்த உங்கள் பிள்ளைகள், மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல ஆசைப்பட்டால், அந்த முயற்சி வெற்றி பெறும். தாய்வழி ஆதரவு பெருகும்.

பன்னிரண்டில் சஞ்சரிக்கும் ராகுவால், பயணங்கள் உறுதியாகலாம். வெளிநாட்டிலிருந்து அழைப்பு வரலாம். கண்ணியம் மிக்க மனிதர் ஒருவர் உங்கள் கடமை செவ்வனே நடக்க உறுதுணையாக இருப்பார். சொத்துகளால் லாபமும், சொந்தங்களால் மேன்மையும் வந்து சேரும். 6-ல் கேது இருப்பதால் எதிரிகளின் பலம் குறையும். புதிய பணியாளர்களைச் சேர்ப்பதில் மும்முரம் காட்டுவீர்கள். ராசிநாதன் வக்ர இயக்கத்தில் இருப்பதால், அவருக்குரிய வழிபாடுகளை முறையாக மேற்கொள்வது நல்லது. புதனுக்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவதன் மூலம் புதிய திருப்பங்கள் காணலாம்.

சுக்ரனின் வக்ர நிவர்த்தி காலம்

உங்கள் ராசிக்கு 2,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். வாய்ப்புகள் கைநழுவிச் செல்லும். ஆனால் 19-ந் தேதி (புதன்கிழமை) சுக்ரன் வக்ர நிவர்த்தியாகிறார். இது மிக, மிக யோகம் தரும் நேரமாகும். சுக்ரன் வக்ர நிவர்த்தியானவுடன் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். தக்க விதத்தில் தன லாபமும் வந்து சேரும். பெண் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். குடும்பத்தில் உள்ளவர் களின் குறைகளைத் தீர்த்து வைப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

புதனின் வக்ர நிவர்த்தி காலம்

உங்கள் ராசிக்கு அதிபதியான புதன், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியாக விளங்குகிறார். அவர் மாதத் தொடக்கத்தில் வக்ரம் பெற்றும், நீச்சம் பெற்றும் இருக்கிறார். 24-ந் தேதி (திங்கட்கிழமை) வக்ர நிவர்த்தியாகி வளர்ச்சியைக் கூடுதலாகக் கொடுக்கப் போகிறார். தொழிலில் நிறைந்த தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் மாற்றங்கள் வந்து சேரும். உறவினர் பகை அகலும். ஊர்மாற்றம், இடமாற்றம் உறுதியாகலாம். பழைய பணியாளர்கள் விலகினாலும், புதிய பணியாளர்களை சேர்த்துக் கொள்வீர்கள். ஆரோக்கிய தொல்லை அகலும்.

மேஷ புதனின் சஞ்சாரம்

மே 8-ந் தேதி மேஷ ராசிக்குப் புதன் செல்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். மங்கள ஓசையும், மழலை ஓசையும் இல்லத்தில் கேட்கும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் தென்முகக் கடவுளை வழிபடுவது நல்லது. அமாவாசையில் முன்னோர் வழிபாட்டையும், பவுர்ணமியில் முருகப்பெருமானையும் வழிபடுங்கள்.

பெண்களுக்கு…

எதிர்பார்ப்புகள் நிறைவேறி இனிமை சேர்க்கும் மாதம் இது. புதிய பாதை புலப்படும். புகழ் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தகராறுகள் தானாக விலகும். பெற்றோரின் ஒத்துழைப்பு தக்க சமயத்தில் கிடைக்கும். உடன் பிறந்தவர்களாலும் கூடுதல் நன்மை உண்டு. கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் திருமணப் பேச்சு நல்ல முடிவிற்கு வரும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவர். சலுகைகள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். திருப்பணிகளுக்கு பொருள் கொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் துளசி வைத்து வழிபடுவது நல்லது. சித்ரா பவுர்ணமியன்று மலைவலம் வருவதன் மூலம் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post