ethiri.com

எதிலும் முன்வைத்த காலை பின்வைக்கக் கூடாது என்று சொல்லும் சிம்ம ராசி அன்பர்களே..!இதோ உங்கள் சித்திரை மாத பலன்………..!!!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் உச்சம் பெறுகிறார். அவரை விரயாதிபதி சந்திரன் பார்க்கிறார். அதே நேரத்தில் இதுவரை 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்து வந்த சனிபகவான், இப்பொழுது வக்ரம் பெற்று வலிமையிழக்கிறார். இனி உங்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும். தொழில் முன்னேற்றம் கூடும். விரும்பிய காரியத்தை விரும்பிய நேரத்தில் செய்து முடிப்பீர்கள். ஆதாயம் கூடும். திரும்பிய பக்கமெல்லாம் உங்கள் புகழ் பரவும் விதத்தில் கிரகநிலைகள் உலாவருகின்றன.

பஞ்சம அஷ்டமாதிபதியான குரு பகவான் 2-ல் சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் வக்ர இயக்கத்திலும் இருக்கிறார். அஷ்டமாதிபதி வக்ரம் பெறும்பொழுது Ôகெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பதற்கு ஏற்ப புதிய திருப்பங்கள் பலவும் காணப்போகிறீர்கள். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். எதிரிகள் உதிரிகளாவர்.

ethiri.com

அர்த்தாஷ்டமச் சனி வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, நீண்ட நாட்களாக குடும்பத்தில் நடைபெறாத சுபநிகழ்வுகள் இப்பொழுது ஒவ்வொன்றாக நடைபெறும். மாற்றினத்தவர்கள் உதவுவார்கள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வீட்டுப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். எதையும் உங்கள் நேரடி கவனத்தில் செய்தால் நன்மைகள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.

தன லாபாதிபதி புதன், குருவோடு பரிவர்த்தனை யோகம் பெற்றிருப்பதால், உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வும், பணி நிரந்தரமும் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பவுர்ணமி தோறும் மலைவலம் வருவதோடு, சித்ரா பவுர்ணமியில் முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வாருங்கள். தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால், முருகப்பெருமான் வழிபாடு தொழில் முன்னேற்றத்திற்கு வித்திடும்.

சுக்ரனின் வக்ர நிவர்த்தி காலம்

மீனத்தில் உச்சம் பெற்றிருக்கும் சுக்ரன், 19-ந் தேதி (புதன் கிழமை) வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வலிமையடைவதால் உடன்பிறப்புகள் வழியில் ஒரு நல்ல தகவல் வந்து சேரும். தொழிலில் இருமடங்கு லாபம் கிடைக்கும். பழைய தொழிலை விட்டுப் புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தேக நலனும் சீராகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

புதனின் வக்ர நிவர்த்தி காலம்

உங்கள் ராசிக்கு தன லாபாதிபதியாக விளங்குபவர் புதன். அவர் 24-ந் தேதி (திங்கட்கிழமை) வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். மனதில் நினைத்த காரியத்தை ஒவ்வொன்றாகச் செய்துமுடிப்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி வங்கிகளில் வைப்பு நிதி சேர்ப்பீர்கள். கல்யாணம், காதுகுத்து, கடைதிறப்பு விழா என்று சுபகாரியங்கள் அடுக்கடுக்காக நடைபெறும் நேரம் இது.

மேஷ புதனின் சஞ்சாரம்

அஷ்டமத்தில் மறைவிடத்தில் சஞ்சரித்து வந்த புதன், மே 8-ந் தேதி 9-ம் இடமான மேஷத்திற்கு வரப்போகிறார். இந்த வரவு நல்ல வரவாக அமையும். இல்லம் கட்டிக் குடியேறும் ஆசை நிறைவேறும். பூர்வீகச் சொத்துகள் கைக்கு கிடைக்கலாம். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பங்காளிப் பகை மாறும். பூர்வீகச் சொத்துகளில் உங்களுக்குரிய பங்கு கிடைக்கலாம்.

இம்மாதம் ராகு-கேதுக்களுக்குரிய சிறப்பு பரிகாரங்களைச் செய்வது நல்லது. உச்ச சூரியனால் நன்மை கிடைக்க சிவன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பெண்களுக்கு…

உங்கள் செல்வாக்கு மேலோங்கும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். ராசிநாதன் சூரியன் உச்சம் பெற்றிருப்பதால் அச்சமின்றி வாழ அடியெடுத்து வைப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மாறும். மங்கள நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத்தக்கதாக அமையும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். தம்பி தங்கைகளின் இல்லத்தில் நடைபெறும் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு மாற்றம் நன்மையைத் தரும். விநாயகப் பெருமான் வழிபாடு வெற்றிகளை வழங்கும். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post