ethiri.com

உடல் பலத்தைக் காட்டிலும் மனோபலம் அதிகம் பெற்ற கடக ராசி அன்பர்களே!இதோ உங்கள் சித்திரை மாத பலன் இதோ ………….!!!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சந்திரனைத் தனாதிபதி சூரியன் பார்க்கும் விதத்தில் மாதம் தொடங்குகிறது. அதுமட்டுமல்லாமல் விரயாதிபதி புதன் வக்ரம் பெற்றிருக்கிறார். அவரை 6,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு பகவான், வக்ரம் பெற்றுப் பார்க்கிறார். எனவே இந்த மாதம் உங்களுக்கு இனிய மாதம் தான்.
எண்ணற்ற வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். நிதிப் பற்றாக்குறை அகலும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் கூட ஆர்வம் காட்டுவீர்கள். அதிக உழைப்பின் பேரில் லாபத்தைப் பெற்று வந்த நீங்கள், இப்பொழுது எளிய வழியில் ஆதாயம் காண்பீர்கள்.

சந்திரனை ராசிநாதனாகப் பெற்ற நீங்கள், சந்திரன் பூரணத்துவம் பெற்று பிரகாசிக்கும் சித்ரா பவுர்ணமி நாளில் மலைவலம் வருவது நல்லது. சித்ரகுப்தனையும் வழிபடுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் உலா வருவதால், உங்களுக்கு சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. ராகு பொருள் வளத்தைக் கொடுப்பார். ஆனால் அதே நேரம் கேது பகவான் விரயங் களை வழங்கக் காரணமாக இருப்பார்.

ethiri.com

அது மருத்துவச் செலவாகவும் இருக்கலாம். அல்லது மனை வாங்குதல் போன்ற சுப விரயங்களாகவும் இருக்கலாம். பால்ய நண்பர் களின் சந்திப்பால் தொழிலுக்குத் தேவையான மூலதனங்கள் கிடைக்கும். என்றைக்கோ வாங்கிப்போட்ட சொத்து இப்பொழுது பலமடங்கு லாபத்திற்கு விலைபோகும். அந்தப் பணம் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு மூலதனமாகவும் இருக்கும்.

சுக்ரனின் வக்ர நிவர்த்தி காலம்

உங்கள் ராசிக்கு 4,11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மாதத் தொடக்கத்தில் உச்சம் பெற்றிருப்பதும், வக்ரமும் அடைந்திருக்கிறார். 19-ந் தேதி (புதன்கிழமை) வக்ர நிவர்த்தியாகிறார். இதன் விளைவாக உறவினர் பகை மாறும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஒருசிலர் ஏற்றுக் கொள்ள முன்வருவர். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். பிரபலமானவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து உதவி செய்வர்.

புதனின் வக்ர நிவர்த்தி காலம்

உங்கள் ராசிக்கு 3,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 24-ந் தேதி (திங்கட்கிழமை) மீனத்தில் வக்ர நிவர்த்தியாகிறார். அதே நேரத்தில் புதன் நீச்சம் பெற்று விளங்குகிறார். மறைவிடத்து ஸ்தானாதிபதிகள் நீச்சம் பெறுவது யோகம்தான். தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டேயிருக்கும். பணத்தை கையில் வைத்துக் கொண்டு காரியத்தைச் செய்ய இயலாது. காரியத்தைத் தொடங்கிவிட்டால் பணம் தானாகவே வந்து சேரும். பயணங்களால் பலன் கிடைக்கும். தூர தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக ஒருசிலருக்கு அழைப்பு கள் வரலாம். வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.

மேஷ புதனின் சஞ்சாரம்

மே 8-ந் தேதி மேஷ ராசிக்குப் புதன் செல்கின்றார். சகாய ஸ்தானாதிபதியான புதன், தொழில் ஸ்தானத்திற்கு செல்லும்பொழுது தொழிலில் முன்னேற்றம் காணப்படும். கூட்டாளிகள் கூடுதல் லாபம் கிடைக்க வழிவகுத்துக் கொடுப்பர். தீட்டிய திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேறும். வங்கிகளில் கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு, அது கிடைக் கலாம். அதே நேரத்தில் 5-ல் சனி இருப்பதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.
இம்மாதம் பவுர்ணமியன்று மலைவலம் வருவது நன்மையைத் தரும். வக்ரச் சனியால் பாதிப்புகள் ஏற்படாமலிருக்க பட்டாபிஷேக ராமர் கோவில் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பெண்களுக்கு…

இம்மாதம் 2-ல் ராகு இருப்பதால் நிதிப்பற்றாக்குறை அகலும். பொருளாதார நிலை உயரும். வாங்கல் -கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். குரு பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால், கல்யாணக் கனவு நனவாகும். தாய்வழி ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். உடன்பிறப்புகள் வழியில் ஒருசிலர் பகைமை பாராட்டினாலும், கடைசி நேரத்தில் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும். உங்கள் சொல்லுக்கு வாழ்க்கைத் துணை மட்டுமல்லாமல், கூட இருப்பவர்களும் மதிப்புக் கொடுப்பர். பொதுநலத்தில் உள்ளவர் களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் விரயம் உண்டு. நாகசாந்திப் பரிகாரங்களை செய்தால் நல்ல காரியம் நடைபெறும்.
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post