ethiri.com

உழைப்பின் மூலமே அதிர்ஷ்டம் வரும் என்று சொல்லும் மிதுன ராசி அன்பர்களே!இதோ உங்கள் சித்திரை மாத பலன் ……….!!!

உழைப்பின் மூலமே அதிர்ஷ்டம் வரும் என்று சொல்லும் மிதுன ராசி அன்பர்களே!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் வக்ரம் பெற்றும், நீச்சம் பெற்றும் சஞ்சரிக்கிறார். குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசிநாதன் மீது பதிகிறது.

ethiri.com

அதுமட்டுமல்லாமல் ராசிநாதன் புதனும், சப்தம ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குருவும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். பரிவர்த்தனை யோகம் என்பது யோகங்களிலேயே சிறந்த யோகமாகும். அதுமட்டுமல்லாமல் நீச்சபங்க ராஜ யோகமும், புத-சுக்ர யோகமும் ஏற்படுகிறது. இதன் விளைவாக பல நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரப்போகிறது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். பக்கத்தில் உள்ளவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். நாலா திசைகளிலும் இருந்து நல்ல தகவல் வந்து கொண்டேயிருக்கும்.

அதே நேரத்தில் வாழ்வை வளப்படுத்துவது வழிபாடுகள் தான் என்பதையும் மறக்க வேண்டாம். வக்ர இயக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கும் பொழுது, அக்கறை செலுத்த வேண்டிய இடம் ஆலயம்தான். குரு, சனி, புதன், சுக்ரன் ஆகிய நான்கு கிரகங்களும் வக்ரம் பெற்று சஞ்சரித்தபடி, மாதம் தொடங்குகிறது. எனவே புதன்கிழமை தோறும் லட்சுமி சமேத விஷ்ணுவையும், வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகையையும், வியாழக்கிழமை தோறும் குருவையும், சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரையும் சனிபகவானையும் தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். அவ்வாறு செய்தால் கைநழுவிச் செல்ல இருந்த வாய்ப்புகள் கூட கைகூடி வரும். நவக்கிரக கவசம் பாடி நவக்கிரகத்தையே வழிபடுவதும் நல்லது.

சகாய ஸ்தானாதிபதி சூரியன் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால், காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். அரசியல் பிரமுகர்களின் ஒத்துழைப்போடு அனைத்து பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் வரும் உன்னதமான மாற்றங்கள் மகிழ்ச்சியளிக்கும். 8-க்குஅதிபதி சனி 6-ல் வக்ரம் பெறும்பொழுது, செய்யும் காரியங்களில் ஜெயம் கிடைக்கும்.

சுக்ரனின் வக்ர நிவர்த்தி காலம்

19-ந் தேதி (புதன்கிழமை) உங்கள் ராசிக்கு 5,12 ஆகிய இடங் களுக்கு அதிபதியான சுக்ரன் வக்ர நிவர்த்தியாகிறார். இதன் விளைவாக பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி, நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும். அவர்கள் மேற்படிப்பு படிப்பதற்காக வெளிநாடு செல்லவேண்டுமென்று விரும்பினால், அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கூடி வரும். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகளை எதிர்பார்த்து காத்திருப்பவர் களுக்கு, மகிழ்ச்சி தரும் விதத்தில் அது நடந்தேறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர்.

புதனின் வக்ர நிவர்த்தி காலம்

உங்கள் ராசிநாதனாகவும், சுகாதிபதியாகவும் விளங்கும் புதன், 24-ந் தேதி (திங்கட் கிழமை) வக்ர நிவர்த்தியா கிறார். முதலில் ஆரோக்கியத் தொல்லை அகலும். அடுத்தடுத்துப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாகனம் வாங்கும் முயற்சியில்ஆர்வம் காட்டு வீர்கள். வாழ்க்கைத் தேவை பூர்த்தியாகும். மனை கட்டிக் குடியேறும் வாய்ப்பு வந்தாலும், சுயஜாதக அடிப்படையில் வீடுகட்டுவதா? அல்லது கட்டிய வீட்டை வாங்குவதா? என்பதை ஆராய்ந்து செயல்படுவது நல்லது.

மேஷ புதனின் சஞ்சாரம்

உங்கள் ராசிநாதன் புதன், மே 8-ந் தேதி லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். எனவே மாதக் கடைசியில் வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். ஏற்றமும், இறக்கமும் இல்லாமல் சமநிலையில் தொழில் நடக்கும். பங்குதாரர்கள் உங்கள் பணத் தேவையைப் பூர்த்தி செய்வர். மாமன் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். வெளிநாடு செல்லும் பயணம் அனுகூலமாகும்.
இம்மாதம் வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயரை வழிபடுவதோடு, வயதுக்கேற்றபடி ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்லது.

பெண்களுக்கு…

ராசிநாதன் புதனின் வக்ர இயக்கத்தால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும் சூழ்நிலை உருவாகும். வீடு, இடம் மாற்றங்கள் வந்தால் அதை ஏற்றுக்கொள்வது நல்லது. விரயங்கள் கூடும். செல்போன் வழி பேச்சால் சிக்கல்கள் வரலாம். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலமே, கணவனின் அன்புக்கு பாத்திரமாக முடியும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத்தக்கதாக இருக்கும். உங்கள் பெயரில் வாங்கிய இடத்தை நல்ல விலைக்கு விற்கும் சூழல் உருவாகும். மாதக் கடைசியில் புதனின் பெயர்ச்சிக்குப் பிறகு புதிய திருப்பங்கள் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். சித்ரா பவுர்ணமி நாளில் சித்ரகுப்தன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post