ethiri.com

வியூகம் அமைத்து செயல்படும் மேஷ ராசி அன்பர்களே! இதோ உங்கள் சித்திரை தமிழ் மாத பலன்கள்…………

வியூகம் அமைத்து செயல்படும் மேஷ ராசி அன்பர்களே!
சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரித்து குருவால் பார்க்கப்படுகிறார். எனவே குரு- மங்கள யோகம் ஏற்படுகிறது. இதனால் புத்தாண்டின் தொடக்கத்தில் நீங்கள் செய்யும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். குரு- மங்கள யோகத்தின் விளைவாக சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். குடும்பத்தில் மணவிழா மட்டுமின்றி குடும்பப் பெரியவர்களின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்ற சுபநிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகளும் தென்படும்.

பூமிகாரகன் செவ்வாய் 2-ல் இருக்கும் பொழுது, வீடு வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டுமென்று எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். புது முயற்சிகளில் வெற்றி காணும் நேரம் இது.

ethiri.com

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான புதன், 12-ம் இடத்திற்கு அதிபதியான குரு வீட்டில் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார். மறைவிடத்து ஸ்தானாதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருப்பது மிக மிக யோகம்தான். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திறமை மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து உதவிக்கரம் நீட்டுவார்கள்.

தூரத்துச் சொந்தங்களால் நன்மை கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். காரசாரமாக விவாதித்து வந்த நண்பர்கள், இனி ஈர மனதோடு உங்களிடம் வந்து சேருவர். மனதில் இருந்த இனம்புரியாத கவலை மாறும்.
புத-சுக்ர யோகம் இருப்பதால் புதிய பாதை புலப்படும். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். பதவி மாற்றங்களும், பணியிடத்து மாற்றங்களும் தானாக வந்து சேரும்.

சுக்ரனின் வக்ர நிவர்த்தி காலம்

மீனத்தில் உச்சம் பெற்றிருக்கும் சுக்ரன், 19-ந் தேதி (புதன்கிழமை) வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 2,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வக்ர நிவர்த்தியாவதால் கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவிற்கு வரும். சண்டை போட்ட குடும்பத்தில் இனி சமாதானக் கொடி பறக்கும். சுக்ரன் விரய ஸ்தானத்தில் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும், வந்த மறுநிமிடம் செலவாகி கவலையை அளிக்கலாம். இதுபோன்ற நேரங்களில் குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிள்ளைகளுக்கான தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழலாம்.

புதனின் வக்ர நிவர்த்தி காலம்

மீனத்தில் சஞ்சரிக்கும் புதன், 24-ந் தேதி (திங்கட்கிழமை) வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 3,6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் வக்ர நிவர்த்தியாகும் பொழுது, சகோதரர்களால் சகாயம் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். ஊதிய உயர்வும், நிலையான வருமானமும் வருவதற்கான வழிபிறக்கும்.

மேஷ புதனின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியாகவும், ஜீவன ஸ்தானதிபதியாகவும் விளங்குபவர் புதன். இவர் மே மாதம் 8-ந் தேதி முதல் உங்கள் ராசியில் உலாவரப் போகிறார். இது ஓரளவுக்கு நன்மை தரும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேருவர். வீடுமாற்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வாகனம் மற்றும் சொத்துகள் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, அதிகாரிகள் அனுகூலமான தகவலைத் தருவார்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு
தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்யுங்கள்.

பெண்களுக்கு…

உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். அவரை குரு பார்ப்பதால், நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சனி பகவானும், செவ்வாயும் பார்ப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். இருப்பினும் மருத்துவரை நாடுவதன் மூலம் உடல்நலத்தை சீராக்கிக் கொள்ளலாம். பிரிந்து சென்ற உறவினர், விரும்பி வந்து சேருவர். இடம், பூமி உங்கள் பெயரில் வாங்குவதற்கான யோகம் உண்டு. கணவன்-மனைவிக்குள் கனிவும் பாசமும் கூடும்.

பிள்ளைகளுக்கான வேலை கிடைத்து பெருமைப்படுவீர்கள். தாய்வழியில் தனவரவு உண்டு. உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எதிர்பார்த்த இலாகா மாற்றம் கிடைக்கும். ஆதியந்த பிரபு வழிபாடு ஆனந்தம் வழங்கும். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post