ethiri.com

ஏன் மறந்தாய் …?

மறந்திட தானா நெஞ்சே உன்னை
மனதில் சுமந்தேனோ ..?- நீ
மறந்தே சென்றாய் இருந்தும் – உன்னை
மறந்தே போனேனோ …?

இளமையில் சுமந்தேன்
இடையிலே எறிந்தாய்
இதுவரை சுமக்கின்றேன் -அன்பே
இதுவரை நினைக்கின்றேன் …

ethiri.com

வழியிலே உன்னை விழிகள் தேடிட
வலியோடு நடக்கின்றேன் …
ஒருமுறை எந்தன் விழியிலே காட்டு
ஓராயிரம் ஆண்டுகள் வாழ்வேன் …

பழகிடும் போது மறந்திட தானா
பாசத்தை விதைத்தயோ.?
எரிந்திடும் போது உருகிடும் மெழுகாய்
என்னை எறிந்தாயோ ..?

ஏதென கேட்டேன் ஏன் எனை மறந்தாய்
எனகோர் பதில் சொல்லாய் …?
உறங்கா நினைவுகள் உன்னை தேடிட
உனக்காய் தவிக்கின்றேன் ….!

– வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -19/04/2017 

Related Post