ethiri.com

காஷ்மீரில் 2 பள்ளிகளில் தீவிபத்து

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கபாமார்க் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் பள்ளி கட்டிடத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தது.

அதே மாவட்டத்தில் அயிஷ்முகம் என்ற இடத்தில் உள்ள ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. அந்த பகுதியினர் உடனடியாக தீயை அணைத்ததால் பள்ளி முதல்வர் அறையில் மட்டும் லேசான சேதம் ஏற்பட்டது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.

ethiri.com
கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post