ethiri.com

மூன்றாம் யுத்தம் ….அமெரிக்கா அழிகிறது

உலக சண்டியா உலக சண்டியா
உனக்கேன் அணு குண்டோ -நீ
ஊதி பெருத்த பல சாலி
உனக்கேன் அணுகுண்டோ ..?

பல சாலி உலகில் நீஎன்றால் – ஏன்
பல நாடுகள் அழைக்கின்றாய்…?
கோழையில்லை நீ என்றால் – தனி
கொடும் போரை மூட்டிடுவாய் …..

ethiri.com

சண்டையில் தோற்ற கோழையே- கொடும்
அணு குண்டுகள் வீசினாய் …
வெல்வாய் என்ற திமிரோடு – மீள்
போருக்கு நுழைகின்றாய் ….

வா வா என்றே உன்னை
வட கொரியா அழைக்கிறது ….
அடிமை வெள்ளையன் நீ ஆவாய் -வளரும்
ஆசியா சிரிக்கிறது ….

ஏழை நாடுகள் மிரட்டியே
எழில் வளம் பறித்தாய் – கொடும்
கேடுகள் தூவியே ஆடியவா – உன்
கொடுங்கோல் அழிகிறது ….

மூன்றாம் யுத்தம் இங்கே – புது
முகவரி எழுதிடுமே….
முன்னே ஊதியே வெள்ளையனின்
முதுகெலும்பு முறிகிறதே ….

ஆடியே வரும் ஆண்டுகளில்
ஆசியா முதலாகும் ….
அணு குண்டுகள் காவியே ஆளும்
ஆசியா மூப்பாகும் …..

கொள்ளை அடித்த வெள்ளையனின்
கொட்டம் முடிகிறது – இனி
புத்தன் ஆளும் தேசமதாய்
புது ஆசியா சிரிக்கிறது ….!

– வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -18/04/2017
 

Related Post