( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

காதலால் என்னை ஏன் கொன்றாய் …!

இதயம் இருந்தால் ஒரு முறை தான் – நான்
இறக்கும் முன்னர் அழுது விடு ….
ஒரு நொடி நான் பட்ட வலிகளையே
உனக்குள் வாங்கி விழி மூடு …

பட்ட படிப்பு நான் இழந்து
பாதி வீதியில் நானேன் ….
உண்டு எறிந்த உணவருந்தி
உழுது வீதியில் நான் திரிந்தேன் …

எதிரி

ஆயிரம் கண்கள் கேலி செய்ய
அழுதே அழுதே நான் அலைந்தேன் ….
தோப்பாய் உயர்ந்த என் வாழ்வை
தோகை உன்னால் நான் இழந்தேன் ….

நீ தந்த வலியால் கண்ணீரு
நிறைந்து கருங்கடல் பெருகியது ….
உனக்குள் இதயம் நீ இன்றி
உலவி திரிவது ஏன் தானோ ..?

ஆசை என்னில் உனக்கின்றி
அன்று காதல் ஏன் சொன்னாய் …?
உயிரே உயிரே என்னை கொல்ல
உள்ளத்தில் என்றோ சதி செய்தாய் …?

– வன்னிமைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -18/04/2017 

Related Post