ethiri.com

போடி …நீ இனி வேண்டாம்….!

உனக்கென வாழ்ந்து
எதை எல்லாம் இழந்தேன்
உனக்கேதும் தெரியாது …
உதவின மறந்து உள்ளம் மடித்தாய்
உண்மையா நீ யாரு ??

தரும் போதெல்லாம் குரங்கென
தாவியே வாங்கினாய் மறந்தாயா ???.
வரவரது சிறுக பணமது குறுக
பாதியில் மறந்தாயே ….

ethiri.com

எதுவென கூறி என்னுடன் கூடினாய்
ஒரு முறை எண்ணாயா ?-நான்
எதுவென கூறி என்னை மிதித்தாய்
உன் மனசு கூசலையா ??

நெடிலில் பேசின் நெஞ்சே அழுதாய்
இவை எல்லாம் பொய்தானா ?-நான்
நெய்தவை எல்லாம் நினைவினில் இழந்தாய்
நீ இனி வேண்டாம் வேண்டாம் ……..!

– வன்னி மைந்தன் -( ஜெகன் )
12/04/2017
 

Related Post