ethiri.com

கற்பழித்த கனவு ….!

உடையாத குள நீரே – நான்
உறவாட தினம் வரவா …?
பட்டாசு நில வொளியில்
பகல் போல நனைவோமா …?

நிழல் போல நீ தொடர – நான்
நிக்காம என்னை தரவா ..?
மூசாம நீ படர – நான்
முழுசாக திண்ணிடவா…?

ethiri.com

பேசாம நீ உறங்க – நான்
லேசாக பார்த்திடவா ..?
கூசாம நீ பார்க்க – நான்
குத்தொன்று விட்டிடவா …?

அசையாம நான் இருந்து
அப்படியே அதை பார்த்தேன்
முழுசாக பார்க்க முன்ன
முழி ஒன்று விழித்திருச்சு…..

கண்டதொரு கனவென்று
கண் விளித்து தெரிந்து கொண்டேன்
ஆனாலும் ஓர் அசிங்கம்
ஆடை எல்லாம் நனைந்திருச்சு …..!

– வன்னி மைந்தன் -( ஜெகன் )
ஆக்கம் -12/04/2017

 

Related Post