ethiri.com

புரிந்தால் நிமிர்வாய் …..!

பல கதை பேசியே ஒருநிலை பாடியே
பாடா படுத்துகிறாய் – நீ
ஆளாய் தேறி வேரை ஊன்ற
தந்தார் மறந்து நின்றாய் ….

வந்தோம் இங்கே நிமிர்ந்தோம் என்றே
வாலை ஆட்டுகிறாய் – நாளை
வந்த வழித்தடம் தேயும் நிலையில்
யாரில் தேங்கி நிற்பாய் …?

ethiri.com

உற்று பார்த்து உணர மறந்தால்
ஊரே உன்னை வெறுக்கும் …
ஆழ வேரை ஊன்றிட முன்னே
ஆடினால் கரை வருவாய் ….

உதவி வந்தவர் உதறி செல்லின்
உன்னை யார் அழைப்பார் ..?-நீ
உன்னை மறந்து தன்னிலை இழப்பின்
உருகியே தெரு கிடப்பாய் …..

எதையும் ஒன்றை செய்யும் முன்னர்
எண்ணி கொண்டால் வலியாது
ஏறி ஆடும் ஆணவம் எறிந்தால்
எதிர் காலம் தேயாது …..!

– வன்னி மைந்தன்-( ஜெகன் )
ஆக்கம் -10/04/2017 

Related Post