ethiri.com

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்;பட்ட உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் நேற்று (14-04-2017) 54 வது நாளாகவும் எதுவித தீர்வுகளும் இன்றி புத்தாண்டு தினமான இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று ; (14-04-2017) சிங்கள தமிழ் புத்தாண்டைக்கொண்டாடும் நிலையில் காணாமல் ஆக்கப்;பட்டவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த வித பதிலையும் வழங்காது காலத்தை இழுத்தடித்;து வருகின்றது.
நல்லாட்சியை ஏற்படுத்திய அரசாங்கம் தனது நூறு நாள்வேலைத்திட்டத்தில் எங்களது உறவுகள் தொடர்பான பிரச்சனைக்குரிய பதிலை வழங்குவதாகவும் தெரிவித்த நிலையில் நாங்களும் இணைந்து தான் நல்லாட்சியை ஆதரித்தோம். ஆனால் எங்களுக்;கான வாக்குறுதிகள் எதனையும் இந்த அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால் இன்று (14-04-2017) கறுப்பு கொடிகளை ஏந்தியும் கறுப்பு ஆடைகளை அணிந்தும் தங்களுடை துக்கத்தை வெளிப்படுத்தியதுடன் எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ethiri.com


 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post