ethiri.com

யாருக்கு தெரியும் …? பதில் சொல்லுங்கள் …!

சித்திரையில புத்தாண்டு
சிரித்து வரும் புத்தாண்டு ….
எங்கள் தமிழர் கொண்டாடும்
ஏனிந்த புத்தாண்டு ..?

ஆரியனும் ,பார்ப்பானும்
அழகாய் செய்த புத்தாண்டு -தமிழ்
அழித்த சிங்களமும்
அந்தோ கொண்டாடும் புத்தாண்டு ….

ethiri.com

ஏன் என்று இதுவரைக்கும்
எவரும் கேட்டதில்லை ….
எப்படி இது சாத்தியமோ
எவருக்கும் தெரியவில்லை ….

ஆண்டாண்டா பரம்பரையா
அழகா தான் நடக்காது …
அறியாமை மேலோட
ஆண்டுகளா முளைக்குது …..

சூரியனும் மேடம் ஓட
சுழலும் ஆண்டாச்சாம் ….
சித்திரையில மே பாதி
சிரிக்க வைக்கும் புத்தாண்டாம் ….

தமிழனவன் பண்டிகையை
சிங்களவன் கை மாற்றோ ..?
இடியப்ப சிக்கலுக்கு
இன்றென்ன பதில் இருக்கோ ..?

– வன்னி மைந்தன் – (ஜெகன்)
ஆக்கம் -13/04/2017

 

Related Post