ethiri.com

கப்டன் பவான் என பொறிக்கப்பட்ட புலிகளின் 15 கிலோ எடையுள்ளவெடிபொருள் மீட்பு: அதிர்ச்சியில் பொலிசார் (படங்கள்)

கப்டன் பவான் என பொறிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் 15 கிலோ எடையுள்ள வெடிபொருள் ஒன்று வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் வீட்டை துப்பரவு செய்த போது வீட்டு வளவில் நிலத்தில் புதையுண்ட நிலையில் இருந்து குறித்த வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ethiri.com

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றார்கள். குறித்த பகுதியில் முன்னர் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தமையும், ஆயுதம் இருப்பதாக பொலிசாரால் தோண்டப்பட்டு எவையும் மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post