ethiri.com

மன்னார் மாவட்ட நானாட்டான் மென்பந்துக் கிரிக்கட் சுற்றுப்போட்டி photo

மன்னார் மாவட்ட நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முருங்கன்
நகரில் சண் றையில் விளையாட்டுக்கழகத்தால் கடந்த 08 ஆம் திகதிமுதல்
10 ஆம் திகதிவரை நடாத்தப்பட்ட மென்பந்துக் கிரிக்கட் சுற்றுப்போட்டியின்
இறுதி நிகழ்வுகள் 10-04-2017 முருங்கன் செம்மந்தீவு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்
பிரதமவிருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார் அதேவேளை முருங்கன் பகுதியை
சேர்ந்த தொழிலதிபர் ஏ.கே.ரொஜன் அவர்களும், கட்டுக்கரை நன்னீர் மீன்பிடி சங்க சமாச
தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ethiri.com

நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் இவ்வாறான கிராமங்களை
ஒன்றுகூட்டி நடாத்தப்படும் நிகழ்வுகளை தாம் வரவேற்பதாகவும் காரணம் தற்போதைய
காலத்தில் இளைஞர்கள் இவ்வாறான நிகழ்வுகள் அதிகம் இடம்பெறாததாலோ என்னவோ
வழிதவறி செல்வதை காணமுடிகிறது ஆகவே தான் இந்த ஒரு முயற்சியை தாம் மீண்டும்
பாராட்டுவதாகவும், இன்றய இளைஞர்கள் நாளைய நமது நாட்டின் தலைவர்கள் ஆகவே
ஒவ்வொருவரும் சிந்தியுங்கள் நமது இனத்துக்காக இத்தனை காலமும் கொடுக்கப்பட்ட
விலைமதிப்பற்ற உயிர்களுக்கு பலனில்லாமல் செய்துவிடாமல் அந்த உயர்ந்த தியாகங்களை
மனதில் நிறுத்தி எதிர்கால நமது அபிவிருத்தி கல்வி விளையாட்டு பண்பாடு அனைத்தையும்
கட்டிக்காக்கவேண்டியவர்கள் நீங்கள் என்பதை ஒருமுறை சிந்தியுங்கள் என்றும், விளையாட்டிற்கு
அப்பால் ஒரு ஒற்றுமையை இந்த மைதானம் காட்டியதை தாம் பார்த்தபோது மிகவும் மகிழ்ந்ததாகவும்
அவர் அங்கு தெரிவித்தார், மேலும் அனைவருக்கும் சித்திரைப்புத்தாண்டு நல் வாழ்த்துக்களையும்
தெரிவித்ததோடு சுற்றுப்போட்டியை முன்னெடுத்து நடாத்திய சண் றையில் விளையாட்டுக்கழகத்திற்கு
தனது 2018 ஆம் ஆண்டிற்க்கான நிதி ஒதுக்கீட்டில் (CBG) இருந்து ரூபாய் ஒரு இலட்சமும், இறுதி போட்டியில்
கலந்துகொண்ட இரண்டு அணிகளுக்கும் அவர்களது கழகத்தின் அபிவிருத்திக்காக தலா ஐம்பதுனாயிரம்
ரூபாவும் வழங்குவதாகவும் அத்தோடு இந்த மைதானத்தின் அபிவிருத்திக்காக அடுத்த ஆண்டு PSDG
நிதி ஒதுக்கீட்டில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி ஒருதொகை நிதி ஒதுக்கி தருவதற்கு ஏதுவாக
கழகத்தினர் முயற்சி மேற்கொள்ளும் பட்சத்தில் தாம் சிபாரிசு செய்வதாகவும் அவர் அங்கு தெரிவித்தார

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post